முந்தய பக்கம்

உறைக்கும் மக்களின் கைகளில் தாராபுரத்தின் எந்திரகலம்!

4 Oct 2026, 2:38 pm
உறைக்கும் மக்களின் கைகளில் தாராபுரத்தின் எந்திரகலம்!
<p><strong>உறைக்கும் மக்களின் கைகளில் தாராபுரத்தின் எந்திரகலம்!</strong></p><p>சங்க காலம் தொட்டு ரோமாபுரி வணிகப் பெருவழியாக திகழ்ந்த தொன்மையான வரலாறு; 1866-இல் கோயமுத்தூரோடு இணைந்து நகராட்சியாக உயர்ந்த நிர்வாகப் பெருமை; ஒட்டன்சத்திரம் - அவிநாசி நான்கு வழிச்சாலையும், பளபளக்கும் மேம்பாலங்களும் காட்டும் தற்காலிக நவீன முகம்... இவை எவையும் தாராபுரம் தொகுதியின் உண்மையான பிம்பம் அல்ல.</p><p>ஆட்சிகளும், எம்.எல்.ஏ-க்களும், அமைச்சர்களும் மாறினாலும் மாறாத தொகுதி மக்களின் வாழ்வாதார போராட்டத்திற்கு நடுவே, தற்போது ஒரு இடைத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. பதவி விலகல்களும், அரசியல் லாபக் கணக்குகளும் உருவாக்கியுள்ள இந்த இடைத்தேர்தல் களத்தில், பண பலத்திற்கும் அதிகார பலத்திற்கும் இடையே, மக்களின் அத்தியாவசிய உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் இடதுசாரிகள் தொடுத்துள்ள அரசியல் சமர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram