தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தாராபுரம் இடைத்தேர்தல்: இடதுசாரி வேட்பாளர் பி.லட்சுமணனை ஆதரித்து தீவிரப்பிரச்சாரம்

29 Sept 2026, 1:31 am
தாராபுரம் இடைத்தேர்தல்: இடதுசாரி வேட்பாளர் பி.லட்சுமணனை ஆதரித்து தீவிரப்பிரச்சாரம்

தாராபுரம் இடைத்தேர்தல்: இடதுசாரி வேட்பாளர் பி.லட்சுமணனை ஆதரித்து தீவிரப்பிரச்சாரம்

தாராபுரம், செப். 28-தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.லட்சுமணனை ஆதரித்து, இடதுசாரிக் கட்சிகள் சார்பில் திங்களன்று தீவிர வாக்குச்சேகரிப்பு நடைபெற்றது.கொண்டரசம்பாளையம், தளவாய்பட்டினம் காளியம்மன் கோவில் வீதி, பகவான் கோவில் பேருந்து நிறுத்தம், பெஸ்ட் நகர், அண்ணா சிலை, எல்.ஐ.சி. உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் கலந்து கொண்டு பேசுகையில், “விலைவாசி உயர்வால் பொதுமக்கள் தவிக்கும் சூழலில், ரேஷன்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை. இதுகுறித்து சட்டமன்றத்தில் கேள்விஎழுப்பியபோது, ’ரேஷன் அரிசியை மாடுகளுக்குத்தான் போடுகிறார்கள்’ என அமைச்சர் பதிலளித்திருப்பது அவரது பொறுப்பற்ற பேச்சின் உச்சமாகும்.

தவெக அரசின் குதிரைப் பேர அரசியல் காரணமாகவே இந்த தேவையற்ற இடைத்தேர்தல் திணிக்கப்பட்டு, பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம்வீணடிக்கப்படுகிறது. இந்த நிதியை ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்க பயன்படுத்தியிருக்கலாம்.சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக எப்போதும் குரல்கொடுப்பது இடதுசாரிகள் மட்டுமே. ஆனால், தவெகவும் திமுகவும் மக்கள் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு தேவையற்றமோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. தாராபுரம் பகுதி மக்களின் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளை மையப்படுத்தி பிரச்சாரம் செய்யும் இடதுசாரி வேட்பாளர் பி.லட்சுமணனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்வில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவரும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுப்பராயன் எம்.பி. மற்றும் இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பலர் திரளாகப் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.