தாராபுரம் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு இடைத்தேர்தல் மாற்றத்தை நிகழ்த்துமா?
29 Sept 2026, 2:02 am

தாராபுரம் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு இடைத்தேர்தல் மாற்றத்தை நிகழ்த்துமா?

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தாராபுரம் நகராட்சி மற்றும் தாராபுரம், குண்டடம், மூலனூர் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்கள், கன்னிவாடி, கொளத்துப்பாளையம், ருத்ராவதி, சின்னக்காம்பாளையம், மூலனூர் ஆகிய ஐந்து பேரூராட்சிகள் அடங்கியுள்ளன. தாராபுரம் நகரம் கிராமப்புற தன்மை கொண்டது என்பதால் இந்த தொகுதி முழுமையாக கிராமப்புறங்கள் கொண்ட தொகுதியாகும். தனித் தொகுதியான இங்கு பட்டியல் வகுப்பு மக்கள் கணிசமானோர் உள்ளனர். அவர்கள் மிகப் பெரும்பான்மையாக விவசாயக்கூலி, முறைசாரா தொழில்களில் வேலை செய்யக்கூடிய உழைப்பாளி மக்கள் ஆவர்.இங்கு ஆண் வாக்காளர்கள் 1,06,875 பேர், பெண் வாக்காளர்கள் 1,15,523 பேர். மூன்றாம் பாலினத்தார் 8 பேர். மொத்த வாக்காளர்கள் 2,22,406 பேர் உள்ளனர். 186 வாக்குச்சாவடி மையங்களில் 320 வாக்கு சாவடிகள் உள்ளன.

தொன்மை வரலாற்றுச் சிறப்புசங்க காலம் தொட்டு ரோமாபுரி வணிகப் பெருவழியில் தாராபுரம் அமைந்துள்ளது. தொன்மையான வரலாற்று சிறப்புமிக்க நகரம் ஆகும். வெள்ளையர் ஆட்சி காலத்தில் 1866 ஆம் ஆண்டில் கோயமுத்தூர் நகராட்சியாக ஆனபோது, தாராபுரம் நகராட்சியும் ஒரே சமயத்தில் உருவானது. இதன் மூலம் தாராபுரம் நகரத்தின் முக்கியத்துவத்தை அறியமுடியும்.நாடு விடுதலை பெற்ற பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், காங்கிரஸ் மூன்று முறை, திமுக, அதிமுக தலா ஆறு முறை, சுயேச்சை ஒரு முறை, பாட்டாளி மக்கள் கட்சி ஒரு முறை என எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

2021 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதாவின் எல்.முருகனை தோற்கடித்து திமுகவின் கயல்விழி செல்வராஜ் வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவிவகித்தார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் சத்தியபாமாவெற்றி பெற்றவுடன் பதவி விலகி தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்ததால் இப்போது இந்த இடைத்தேர்தல்நடைபெறுகிறது. பாசனமும், மானாவாரியும்தாராபுரம் தொகுதி பிஏபி, அமராவதி பாசன பகுதிகளை கொண்டிருக்கிறது. அத்துடன் மானாவாரி பயிர் சாகுபடியும் நடைபெறுகிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடைவளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. தொகுதி முழுமைக்கும் பரவலாக விவசாய பாசனத்திற்கான தண்ணீர் பற்றாக்குறை, குடிநீர் இல்லாமல் வறட்சியில் சிக்கித் தவிப்பதால் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் தண்ணீர் பிரச்சனை பிரதானமாக உள்ளது.குடிநீர் வசதி காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் கொடுமுடியில் இருந்து மூலனூர், தாராபுரம் வரும் குடிநீர் திட்டத்தில் தேவைக்கேற்ப குடிநீர் கிடைக்கவும், கட்டமைப்பு வசதியை அதிகரிக்க வேண்டும், அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் மக்கள் கேட்கின்றனர். நல்லதங்காள் அணை, உப்பாறு அணை ஆகியவற்றிற்கு சீராக தொடர்ச்சியாக தண்ணீர் கிடைப்பதற்கு வழி செய்து கொடுத்தால் இந்த வட்டாரத்தின் விவசாயத்திற்கு பேருதவியாக இருக்கும். குடிநீர்ஆதாரத்துக்கும் பயன்படும்.

பிஏபி திட்டத்தில் இரண்டாவது மண்டல பாசனத்திற்கு ஆகஸ்ட் 15 இல் தண்ணீர் விட வேண்டியது இதுவரை திறக்கப்படாததால், பயிர்கள் வாடி விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.விவசாயத்திற்கு சந்தை வாய்ப்புமூலனூர் வட்டாரத்தில் அரிய வகை மூலிகை பயிரான கண்வலி விதை (செங்காந்தள்) சாகுபடி மற்றும் முருங்கை விவசாயம் நடைபெறுகிறது. கண்வலி விதைக்கு சந்தையில் நல்ல விலை கிடைத்தாலும், இடைத்தரகர்கள் விலைகளை தீர்மானிப்பதால், நேரடியாக விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை. கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த வட்டாரத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகளிடம் கண்வலி விதை கொள்முதலுக்கு ஏற்பாடு செய்தால் விவசாயிகளுக்கு நல்லவிலை கிடைக்கும்.

அதேபோல் முருங்கை உற்பத்தி அதிகமாக நடைபெறும் இங்கு முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைத்தால் முருங்கை விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதுடன், வேளாண் தொழிற்சார் வேலை வாய்ப்பு கிடைக்கும்.வெங்காயம், தக்காளி உள்பட காய்கறி உற்பத்தி பரவலாக நடைபெறும் நிலையில், அடிக்கடி விலை வீழ்ச்சியை விவசாயிகள் சந்திக்கின்றனர். எனவே காய்கறிகளை பாதுகாத்து வைக்க குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக உள்ளது. ஆனால் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.

நிலக்குவியலும், நிலப்பகிர்வும்பஞ்சமி, பூமிதான, இனாம் நிலங்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் குவியலாக உள்ளது. இவற்றை கிராமப்புற ஆதிக்கம் செலுத்தும் வசதி படைத்தசிலர் அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். பட்டா வைத்துள்ள பட்டியல் இன மக்கள் அந்தநிலங்களை மீட்க போராடினாலும் இதுவரை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருக்கும் மக்கள் இந்த தொகுதியில் பல ஆயிரம் பேர்உள்ளனர்.

வீட்டுமனை பட்டா, நில உரிமை கொடுத்து நீர்ப்பாசன திட்டங்களை மேம்படுத்தினால் தாராபுரம் தொகுதியின் அடிப்படை முகத்தோற்றம் மாறும்.மிகப்பெரும் வளர்ச்சி பெறும்.கால்நடை சந்தைமூலனூர், குண்டடம் கால்நடை சந்தைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கும், கால்நடைகளை பாதுகாத்து பராமரிப்பதற்கும் உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்று கால்நடைவியாபாரிகள் கோருகின்றனர். ஒரு பகுதி காற்றாலைகள் மின்சா

ரம் உற்பத்தி, சுற்றுவட்டார பகுதிகளில் நூற்பாலைகள், ஜவுளி நிறுவனங்கள் அமைந்துள்ளன. செங்கல்சூளைகளும் உள்ளன.

மருத்துவ வசதிஇந்தத் தொகுதியில் தாராபுரம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு நவீனமாக காட்சியளிக்கிறது. ஆனால் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் முழுமையாக நியமிக்க வேண்டும். உபகரணங்கள், தேவையான மருந்துகள் இருப்பு வைத்து நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.மூலனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி மருத்துவமனையாக மாற்ற வேண்டும்.

மூலனூரில் அரசு கலைக் கல்லூரி, பயணியர் தங்கும் விடுதி அமைக்க வேண்டும். ஒரு பகுதி காற்றாலைகள் மின்சாரம் உற்பத்தி, சுற்றுவட்டார பகுதிகளில் நூற்பாலைகள், ஜவுளி நிறுவனங்கள் அமைந்துள்ளன. செங்கல் சூளைகளும் உள்ளன. பட்டுப்பூச்சி வளர்ப்பு, கோழிப்பண்ணை தொழில்களும் நடைபெறுகின்றன.

போக்குவரத்து வசதிதொகுதி முழுவதும் இருக்கும் கிராமப்புறங்களுக்கு பேருந்து வசதி மிக, மிக குறைவாகவே உள்ளது. அதுவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் கணிசமான பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன. அவற்றை மீண்டும் முழுமையாகஇயக்கவில்லை. எனவே கிராமப்புற பேருந்து வசதியை அதிகரிப்பதுடன், நிறுத்தப்பட்ட வழித்தடங்களிலும், தேவையான புதிய வழித்தடங்களிலும் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும். அது இந்த வட்டார சமூக பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று கிராமப்புற மக்கள் கூறுகின்றனர்.பளபளப்பும், உண்மை முகமும்ஒட்டன்சத்திரம், அவிநாசி நான்கு வழி சாலை இந்தத் தொகுதியின் குறுக்காக பளபளப்பாக செல்கிறது. மேம்பாலங்களும், சில நவீன அடுக்குமாடி கட்டிடங்களும் மேம்போக்காக தாராபுரத்தின் முகத்தோற்றத்தை நவீனமாக காட்டினாலும், இந்தத் தொகுதி முழுவதும் பரவி இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை நலிந்த நிலையிலேயே உள்ளது. அடுத்தடுத்து வந்த ஆட்சிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும், கடைசியாக இருந்த அமைச்சரும் என பலர் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும், தாராபுரம்தொகுதி மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றம் ஏற்படவில்லை என்பதையே தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு மிகுந்த கோரிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.- வே.தூயவன்