தர்மசாலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் பீதியில் இமாச்சல்
6 Jun 2026, 9:19 pm

தர்மசாலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் பீதியில் இமாச்சல்

இமயமலைச்சாரலில் உள்ளது தர்மசாலா (இமாச்சல பிரதேச மாநிலம்). இது நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இந்நிலையில், வெள்ளியன்று இரவு முதல் தர்மசாலா பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு, இமாச்சல் மக்க ளை பீதியில் ஆழ்த்தி வருகிறது.

இதில் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவான மிக தீவிரமான நிலநடுக்கமும் பதிவாகி யுள்ளது. இதுதொடர்பாக இமாச்சல் வருவாய் துறையினர் கூறுகையில்,“தர்ம சாலாவில் ஜூன் 5 அன்று நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து தாக்கியுள்ளன.

இதில் மிக வலுவான நிலநடுக்கம் இரவு 10:04 மணிக்கு ஏற்பட்டது. இதன் மையப் புள்ளி தர்மசாலாவிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில், காங்ரா - சம்பா எல்லை யில் உள்ள தவுலாதர் மலைத்தொடரில் இருக்கும் தார் கடோய், குக்தி காப்புக் காடுகளுக்கு இடையே அமைந்தி ருந்தது.

எனினும் இந்த நிலநடுக்கங்க ளால் எவ்வித உயிர்ச்சேதமோ, பெரிய அளவிலான சொத்துச் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை” என்று சனியன்று தெரிவித்தனர்.