தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா : 2 விருதுகளை வென்ற தனுஷ்
22 Sept 2026, 10:31 pm

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா : 2 விருதுகளை வென்ற தனுஷ்

72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா செவ்வாயன்று நடைபெற்றது. இதுவரை தில்லியில் மட்டுமே நடைபெற்று வந்த தேசிய விருது வழங்கும் விழா, முதன்முறையாக இந்த ஆண்டு குஜராத்தில் நடத்தப்பட்டுள்ளது. தேசிய விருதுகள் வென்ற திரைக் கலைஞர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார். ‘ராயன்’ திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றார். சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை ‘அமரன்’ படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பெற்றார். தொடர்ந்து அமரன் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை ராஜ்குமார் பெரியசாமியும், சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதை கலைவாணன் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர். மகாராஜா படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை சாச்சனா நமிதாஸ் பெற்றார். தொடர்ந்து, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ‘பிரம்மயுகம்’ படத்திற்காக மம்மூட்டி பெற்றுக் கொண்டார். மகாராஜா படத்திற்காக சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான தேசிய விருதை அனல் அரசு பெற்ற நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் படத்திற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான (சிறப்பு விருது) தேசிய விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் தனுஷ் ஒரே ஆண்டில் 2 தேசிய விருதும், மொத்தத்தில் தனது 6ஆவது தேசிய விருதையும் பெற்றுள்ளார்.