முந்தய பக்கம்

பேராவூரணியில் வளர்ச்சிப் பணிகள் துவக்கம்

12 Mar 2026, 4:20 pm
பேராவூரணியில்  வளர்ச்சிப் பணிகள் துவக்கம்
<p><strong>பேராவூரணியில் &nbsp;வளர்ச்சிப் பணிகள் துவக்கம்</strong></p> <p>தஞ்சாவூர், மார்ச் 12- &nbsp;தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கப்பட்டன. பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளியில் ரூ.3 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சைக்கிள் செட், கொன்றைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உணவருந்தும் கூடம் ரூ.9.70 லட்சத்திலும், சேதுபாவாசத்திரம் மேலத்தெரு சாலை வலுப்படுத்துதல் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.22.88 லட்சத்திலும், இரண்டாம்புளிக்காடு ஊராட்சி, சேதுபாவாசத்திரம் - பட்டுக்கோட்டை பள்ளி சாலை ரூ.11.28 லட்சத்திலும், மரக்காவலசை ஊராட்சி ரெகுநாயகிபுரம் நாடார் குடியிருப்பு சாலை ரூ.11.28 லட்சத்திலும், ராவுத்தன்வயல் ஊராட்சி படகு குழாம் சாலை ரூ.11.28 லட்சத்திலும், செந்தலைவயல் மீனவர் காலனி சாலை ரூ.20.56 லட்சத்திலும், திருவத்தேவன் ஊராட்சி மந்திரிப்பட்டினம் முஸ்லிம் தெரு சாலை ரூ.16.50 லட்சத்திலும், குப்பத்தேவன் ஊராட்சி குடியிருப்பு சாலை ரூ.20 லட்சத்திலும் என மொத்தம் ரூ.1 கோடியே 26 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை, செவ்வாய்க்கிழமை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram