தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திண்டுக்கல் மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள், கல்விக் கடன் வழங்கும் விழா

28 Nov 2025, 2:28 pm
திண்டுக்கல் மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள், கல்விக் கடன் வழங்கும் விழா
<p><strong>திண்டுக்கல் மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள், கல்விக் கடன் வழங்கும் விழா</strong></p> <p>ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., தொடங்கி வைத்தார் திண்டுக்கல், நவ.28 - திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மாநக ராட்சி துவக்கப் பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் உயர் கோபுர மின் விளக்கை ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. தொடங்கி வைத்தார். &nbsp;திண்டுக்கல் ஆர்.எம். காலனி அருகேயுள்ள பாலதிருப்பதியில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளி &nbsp;சுற்றுச்சுவருக்கு, மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து பணிகள் நிறைவடைந்த பள்ளியின் &nbsp;சுற்றுச்சுவரை வெள்ளியன்று ஆர். சச்சிதானந்தம் எம்.பி. திறந்து வைத்தார். இதேபோல் அங்குவிலாஸ் சாலையில் திண்டுக்கல் நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுர விளக்கையும் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. திறந்து வைத்தார். &nbsp;இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திண்டுக்கல் மாவட்டச் செயலா ளர் கே.பிரபாகரன், மாநகரச் செய லாளர் ஏ.அரபு முகமது, மாவட்டக் &nbsp;குழு உறுப்பினரும் அப்பகுதியின் மாமன்ற உறுப்பினருமான கே.எஸ். கணேசன் மற்றும் அப்பகுதி திமுக, &nbsp;சிபிஎம் மற்றும் கூட்டணிக் கட்சி யைச் சேர்ந்தவர்கள் &nbsp;கலந்து கொண்டனர். ரூ.5.41 கோடி கல்விக் கடன் வழங்கல் வியாழனன்று திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரியில் கல்விக்கடன் வழங்கும் விழா நடை பெற்றது. இவ்விழாவில் 154 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5.41 &nbsp;கோடி மதிப்பிலான கல்விக் கடன் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மக்க ளவை உறுப்பினர் ஆர்.சச்சிதா னந்தம் எம்.பி, மாவட்ட ஆட்சியர் &nbsp;செ.சரவணன் ஆகியோர் கல்விக் கடன் நிதியை வழங்கினர். உதவி &nbsp;ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோ தினி மாவட்ட ஆட்சியரின் நேர்முக &nbsp;உதவியாளர் (பொது) ர.கீர்த்தனா மணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆர்.சிவக்குமார் உட்பட &nbsp;அரசு அலுவலர்கள், உயர்கல்வி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.