தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உடுமலை, மடத்துக்குளம் தொகுதி வளர்ச்சிக்கான திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்

24 Feb 2026, 3:55 pm
உடுமலை, மடத்துக்குளம் தொகுதி வளர்ச்சிக்கான  திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்

உடுமலை, மடத்துக்குளம் தொகுதி வளர்ச்சிக்கான  திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்

உடுமலை, பிப்.24- உடுமலை மற்றும் மடத்துக்குளம்  தொகுதிகள் மேலும் வளர்ச்சி அடை யும் வகையிலான திட்டங்கள் திமுக  தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என அயலகத் தமிழர் நல வாரியத் தின் தலைவர், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பி னர் கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார். உடுமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் செவ்வாயன்று திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொது மக்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதி கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர். அப்போது நடை பெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கார்த்திகேய சிவசேனாதிபதியிடம் கூறியதாவது: இப்பகுதியில் வளர்ச் சிக்கு தேவையான அனைத்து தொழில்களும் ஒரே இடத்தில் கொண்ட சிட்கோ தொழில் நகரத்தை  உருவாக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட சிறப்பு டைடல் பார்க்  அமைக்க வேண்டும். தரிசு நிலங் களை மேம்படுத்த, நிலங்களை சரி  செய்ய, தேவையான நீர் பாசனங்க ளுக்கு சூரியஒளி மின்சாரத்தை பயன் படுத்த கூடுதல் மானியத்துடன் கடன்  வழங்க வேண்டும். தென்னை மதிப்பு கூட்டுப் பொருட் களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய அரசு நிறுவனம் துவங்க வேண்டும். கால்நடை வளர்ப்பு மற்றும் கறிக்கோழி வளர்ப்புக்கு தனி  வாரியங்களை அமைக்க வேண்டும்.  விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். காட்டுப்பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண் டும்.  பிஏபி, அமராவதி அணையில் இருந்து நடைமுறையில் இருக்கும் பாசனத் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும். நல்லாறு மற்றும் அப்பர் அமராவதி அணை திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். மேலும் உடுமலை குளங்களில் பறவைகள் சரணாலயம் அமைத்து, கரைப்பகு தியில் நடைமேடைகள் கட்ட வேண் டும். இந்த மாவட்டத்தில் முக்கிய  சுற்றுலாத் தலங்களாக இருக்கும் அம ராவதி மற்றும் திருமூர்த்தி அணைப் பகுதியில் பூங்கா மற்றும் படகு சவா ரிகளை நடைமுறைப்படுத்த வேண் டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து பேசிய கார்த்தி கேய சிவசேனாதிபதி, தரிசு நிலங் களை மேம்படுத்தவும், அதில் புதிய  தொழில்நுட்பத்தை பயன்படுத்துவ தில் தமிழகம் முதல் இடத்தில் உள் ளது. தென்னை நல வாரியம் அமைக் கவும், தகவல் தொழில் நுட்ப நிறுவ னம் மற்றும் பொறியியல் கல்லூரி குறித்து திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தபடும் என் றார். இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில்  பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப் பினர் ஈஸ்வரசாமி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஜெயராம கிருஷ் ணன், திமுக உடுமலை நகரச் செயலா ளர் வேலுச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.