ரூ.2.55 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள்
14 Feb 2026, 4:33 pm
<p><strong>ரூ.2.55 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள்</strong></p>
<p>ஆவடியில் ரூ.2.55 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர் சா.மு.நாசர் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். ஆவடி மாநகராட்சி உட்பட்ட 48ஆவது வார்டு அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுதல், 47ஆவது வார்டில் புதிய பூங்கா அமைத்தல், 35ஆவது வார்டில் புதிதாக நிழற்குடை அமைத்தல், 19ஆவது வார்டில் பூங்கா மற்றும் நடைபாதை அமைத்தல், 1ஆவது வார்டில் தார் சாலை அமைத்தல், 12ஆவது வார்டு சமுதாயக்கூடம் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு ரூ. 2.24 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மேயர் கு.உதயகுமார், ஆணையர் ரா.சரண்யா, மண்டல குழுத்தலைவர்கள் ஜி.ராஜேந்திரன், அமுதா பேபி சேகர், வி.அம்மு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
