முந்தய பக்கம்

தேவனாம்பட்டினம் விடுதி மாணவர்கள் போராட்டம்

3 Dec 2025, 2:59 pm
தேவனாம்பட்டினம் விடுதி மாணவர்கள் போராட்டம்
<p><strong>தேவனாம்பட்டினம் விடுதி மாணவர்கள் போராட்டம்</strong></p> <p>கடலூர், டிச.3- உரிய நேரத்தில் உணவு வழங்க கோரி தேவனாம்பட்டினம் விடுதி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். பெரியார் அரசு கலைக் கல்லூரியின் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் சமுக நீதி விடுதியில் 88ற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இவர்களுக்கு உணவு உரிய &nbsp;நேரத்தில் வழங்கப்படாமல் இருக்கிறது. &nbsp;விடுதிகாப்பாளர் முறையாக விடுதிக்கு வருவதில்லை, 5 சமையலர் இருந்த இடத்தில் 6 மாதமாக ஒரு சமையல்காரர் மட்டுமே உள்ளார். அவரும் நேரத்திற்கு வந்து உணவு சமைத்து வழங்காததால் &nbsp;மாணவர்கள் கல்லூரி தேர்வு காலத்திலும் சரியான நேரத்திற்கு செல்ல முடிய வில்லை. உணவு சாப்பிடாமல் &nbsp;பசியுடன் கல்லூரிக்கு செல்லும் நிலையில் உள்ளனர். மாணவர்கள் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலரிடம் புகார் அளித்தும் இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கும் எடுக்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுத்து, உரிய நேரத்தில் உணவு வழங்க வேண்டும். புதியதாக சமையலரை பணி நியமனம் செய்ய வேண்டும். காப்பாளர் விடுதியில் தங்கி பணிசெய்ய வேண்டும். விடுதி பாதுகாவலர் பணியமர்த்தப்பட வேண்டும், &nbsp;முதலாம் ஆண்டு மாண வர்களை விடுதியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து உணவு அருந்தாமல் &nbsp;சரவணன் தலைமையில் மாணவர்கள் போராட்டத்தால் &nbsp;ஈடுபட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram