முந்தய பக்கம்

தேவனாம்பட்டினம் பாரம்பரியக் கட்டட மறுசீரமைப்புப் பணி ஆய்வு

27 Nov 2025, 3:11 pm
தேவனாம்பட்டினம் பாரம்பரியக் கட்டட மறுசீரமைப்புப் பணி ஆய்வு
<p>கடலூர், நவ.27- கடலூர் தேவனாம்பட்டினத்தில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஆங்கிலேயர் காலத்திய பழமையான துறைமுக அலுவலர் மற்றும் மருத்துவ அலுவலர் பாரம்பரியக் கட்டட மறுசீரமைப்புப் பணிகளை, அரசு முதன்மைச் செயலாளர் டி.என். வெங்கடேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, மறுசீரமைப்புக்குப் பிறகு இந்தக் கட்டடங்களில் அருங்காட்சியகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram