தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மைக்கேல்பட்டியில் விளைநிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் தனிநபருக்கு மாறுதல் வட்டாட்சியர், காவல்துறையினரைக் கண்டித்து தேவகோட்டை வட்டாட்சியரகம் முன்பு போராட்டம்

11 Jun 2026, 9:35 pm
மைக்கேல்பட்டியில் விளைநிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் தனிநபருக்கு மாறுதல் வட்டாட்சியர், காவல்துறையினரைக் கண்டித்து தேவகோட்டை வட்டாட்சியரகம் முன்பு போராட்டம்

மைக்கேல்பட்டியில் விளைநிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் தனிநபருக்கு மாறுதல் வட்டாட்சியர், காவல்துறையினரைக் கண்டித்து தேவகோட்டை வட்டாட்சியரகம் முன்பு போராட்டம்

தேவகோட்டை, ஜூன் 11 ஐந்து தலைமுறையாக சாகு படி செய்த விவசாயிகளின் நிலங்க ளை விவசாயிகளிடமே ஒப்படைக் கக்கோரி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம், திடக்கோட் டை குரூப் புளியால் பிர்க்கா மைக் கேல்பட்டி கிராம மக்கள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. இப்பகுதி மக்கள் ஐந்து தலை முறையாக சாகுபடி செய்து வரும் நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் தனிநபருக்கு மாறுதல் ஆகி யுள்ளது.இதுவரை ரசீது மற்றும் உழவடை பட்டா பெற்று அனுப வித்து வரும் மைக்கேல்பட்டி கிராம மக்களின் சொத்தை நிலமோசடி கும்பல் போலி ஆவணம் மூலம் நில மோசடி செய்யும் சாதி ஆதிக்க தனிநபருக்கு பட்டா மாறுதல் செய்துள்ளனர்.

பெரும் மோசடிக்கு துணை போ கும் வட்டாட்சியரை கண்டித்தும், சாதி ஆதிக்க நபருக்கு துணை போகும் காவல்துறையை கண்டித் தும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

வட்டாட்சியர் தங்க மணி, காவல் துணைக்கண்கா ணிப்பாளர் கண்ணனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர் மோ கன்,மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வீரபாண்டி, கருப்புச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலைவர் பொன்னுச்சாமி, ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்தி னர்.அகில இந்திய விவசாய தொ ழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.மேற்படி பேச்சு வார்த்தையில் கீழ்க்கண்டவாறு முடிவு எடுக்கப்பட்டது.

மேற்படி திடக்கோட்டை குரூப், புல எண்கள்.364/6, 363/2A, 364/1, 363/1, 365/1, 365/2 ஆகிய புலங்க ளுக்கான பட்டா மாறுதல் ஆவ ணங்கள் வழங்கப்படும் என தெரி விக்கப்பட்டது.

புலங்கள் செந்தில் என்பவர் பெயரில் பட்டா மாறுதல் ஆனதற் கான ஆவணங்கள் அலுவலகத் தில் இருப்பின் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதன் பின்னரே போராட்டம் கைவிடப் பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.