தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நேரடி நெல் கொள்முதல் நிலையம்: தேவதானம் பகுதியில் திறக்க கோரிக்கை

11 May 2026, 11:42 pm
நேரடி நெல் கொள்முதல் நிலையம்: தேவதானம் பகுதியில் திறக்க கோரிக்கை

நேரடி நெல் கொள்முதல் நிலையம்: தேவதானம் பகுதியில் திறக்க கோரிக்கை

விருதுநகர், மே 11- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவதானம் பகு தியில் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா விடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனு வில் கூறப்பட்டதாவது: இராஜபாளையம் வட்டம் தேவதானம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகு படி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தனியார் வியாபாரிகள் மற்றும் புரோக்கர் கள் குறைந்த விலைக்கு நெல்லை வாங்க முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரப் பகுதிகளில் விவசாயம் அதிக அள வில் நடைபெற்று வருவதால், யானை, காட்டுப் பன்றி, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் நெற்பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரி வித்துள்ளனர்.

எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தேவதானம் பகுதியில் உடனடியாக அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

முன்னதாக மாவட்ட ஆட்சியரை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.முருகன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர் ஏ.ராமர், ஒன்றியச் செயலாளர் வன ராஜ், பால்சாமி, மாரிமுத்து உள்ளிட்டோர் நேரில் சந்தித்து மனுவை வழங்கினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.