தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உதவி காவல் ஆய்வாளர் தேர்வு ரத்து மீண்டும் தேர்வு நடத்தக் கோரிய வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் உத்தரவு

2 Feb 2026, 4:51 pm
உதவி காவல் ஆய்வாளர் தேர்வு ரத்து மீண்டும் தேர்வு நடத்தக் கோரிய வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் உத்தரவு
<p><strong>உதவி காவல் ஆய்வாளர் தேர்வு ரத்து மீண்டும் தேர்வு நடத்தக் கோரிய வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் உத்தரவு</strong></p> <p>மதுரை, பிப்.2- உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்க ளுக்கான தேர்வை ரத்து செய்து, மீண்டும் &nbsp;புதிதாக தேர்வு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தேர்வு முடிவுகளை திரும்ப பெற்றதற்கான காரணம் குறித்து, யூனிபார்ம் சர்வீசஸ் ரிக்ரூட்மென்ட் போர்டு &nbsp;தரப்பில் விரிவான அறிக்கையை தாக்கல் &nbsp;செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி &nbsp;மற்றும் ஆனந்தராஜா ஆகியோர், உயர்நீதி மன்ற மதுரை அமர்வில் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர். மனுவில், உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் &nbsp;தேதி நடைபெற்றதாகவும், பிரிவு &lsquo;பி&rsquo; பகுதி யில் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டபடி தமிழ் &nbsp;மொழியிலிருந்து வினாக்கள் இடம்பெற வில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தனர். அதற்கு பதிலாக, உளவியல் பிரிவிலிருந்து &nbsp;10 வினாக்கள் கூடுதலாக கேட்கப்பட்டுள்ள தாகவும், இது தேர்வு விதிமுறைகளுக்கு முரணானது என்றும் மனுவில் தெரிவிக்கப் பட்டிருந்தது. எனவே, தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், அந்தத் தேர்வை &nbsp;ரத்து செய்து மீண்டும் புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரியிருந்தனர். இந்த வழக்கு திங்களன்று நீதிபதி புகழேந்தி &nbsp;முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், &ldquo;தேர்வுக்கான பாடத்திட்டத்தில் தமிழிலிருந்து 10 வினாக்கள் &nbsp;இடம்பெறும் என தெளிவாக குறிப்பிடப்பட்டி ருந்த நிலையில், எந்தத் தமிழ் வினாவும் கேட்கப்படவில்லை. மேலும், தேர்வு முடிவுகள் கட்-ஆப் இன்றி வெளியிடப்பட்டுள்ளன. இது ஏற்கத்தக்கதல்ல&rdquo; என வாதிடப்பட்டது. அரசுத்தரப்பில், &ldquo;தொழில்நுட்ப கோளாறு &nbsp;காரணமாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவு களில் பிழை ஏற்பட்டதால், அவை திரும்பப் பெறப்பட்டுள்ளன&rdquo; என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நீதிபதி, &ldquo;தேர்வு முடிவுகளை திரும்பப் பெற்றதற்கான காரணம் என்ன?&rdquo; என்பது குறித்து யுஎஸ்ஆர்பி தரப்பில் &nbsp;விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை பிப்ரவரி 4ஆம் தேதிக்கு &nbsp;ஒத்திவைத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.