“பட்டா கொடுத்தும் நிலத்தை அளக்கவில்லை”
29 Dec 2025, 6:22 pm
<p><strong>“பட்டா கொடுத்தும் நிலத்தை அளக்கவில்லை”</strong></p>
<p>ஈரோடு, டிச. 29 – ஈரோடு மாவட்டம், குத்தியாலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு மலைக் கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட இல வச வீட்டுமனைப் பட்டாக்களுக்கான நிலத்தை அளவீடு செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். பழங்குடி ஊராளி மக்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் கூறியிருப்பதாவது, குத்தியாலத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கானக்குத்தூர், கரளயம், சோளத்தூர், பிள்ளையார் பிரிவு, ஒசபாளையம், பவளக்குட்டை, அத்தியூர், கேர்மாளம், அட்டணை, கூட் டார் தொட்டி ஆகிய மலைக்கிராமங்க ளில் ஏராளமான ஊராளி பழங்குடியின மக்கள் வசித்து வருகிறோம். வீட்டுமனைப் பட்டா இல்லாமல் தவித்து வந்த எங்களுக்கு, கடந்த 2024 ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஈரோட்டில் நடை பெற்ற அரசு விழாவில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். அரசு வழங்கிய அந்தப் பட்டாக்கள் தற்போது எங்கள் கையில் உள்ளன. ஆனால், அந்தப் பட்டாக்களில் குறிப் பிட்டுள்ள நிலம் எங்கே இருக்கிறது என்று இதுவரை வருவாய்த் துறை யினர் அளவீடு செய்து அடையாளம் காட்டவில்லை. பட்டா கிடைத்தும் நிலம் எங்கே என்று தெரியாமல் நாங்கள் தவித்து வருகிறோம். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, எங் கள் பட்டாக்களுக்கான நிலத்தை விரை வாக அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டும்.” என அதில் தெரிவித்துள்ள னர்.</p>
