முந்தய பக்கம்

2030-க்குள் 8 லட்சம் ‘கலைஞரின் கனவு இல்லங்கள்’ துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தகவல்

12 Mar 2026, 4:20 pm
2030-க்குள் 8 லட்சம் ‘கலைஞரின் கனவு இல்லங்கள்’ துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தகவல்
<p><strong>2030-க்குள் 8 லட்சம் &lsquo;கலைஞரின் கனவு இல்லங்கள்&rsquo; துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தகவல்</strong></p> <p>திருவண்ணாமலை, மார்ச் 12 தமிழ்நாட்டில் குடிசை வீடுகளே இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கில், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் 8 லட்சம் &lsquo;கலைஞரின் கனவு இல்லங்கள்&rsquo; கட்டித் தரப்படும் என்று சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி அவர்கள் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழா வில், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். குடிசைகளை மாற்றி நிரந்தர வீடு களை அமைத்துக் கொடுப்பதன் மூலம் தமிழகத்தின் உட்கட்டமைப்பை வலிமைப்படுத்த அரசு இலக்கு நிர்ண யித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram