முந்தய பக்கம்

கடலூரில் நூலக வார விழா துணை மேயர் துவக்கி வைத்தார்

19 Nov 2025, 3:33 pm
கடலூரில் நூலக வார விழா  துணை மேயர் துவக்கி வைத்தார்

கடலூரில் நூலக வார விழா  துணை மேயர் துவக்கி வைத்தார்

கடலூர், நல.19-
58வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்ட நூலக மையத்தின் சார்பில் மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடைபெற்றது.
முதல் நிலை நல்நூலகர் ஆனந்த கணேசன்  வரவேற்புரையாற்றினார். அய்யா நூலக வாசகர் வட்ட தலைவர் பாஸ்கரன், கௌரவத் தலைவர் தங்க சுதர்சனம் ஆகியோர் முன்னிலை வகித்த னர். கடலூர் மாவட்டத்தை தமிழ்ச்சங்க பொருளாளர் கவிஞர் குறிஞ்சி ந.இரவி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன் கட்டுரைப் போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், பெண்கள் மேல்நிலைத் தலைமை ஆசிரியர் தனலட்சுமி, கடலூர் மாவட்ட தமிழ் சங்கத் துணைத் தலைவர் சிவக்குமரன், ஊடக செயலாளர் கவிஞர் ம.ரா. சிங்காரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி  மற்றும் ஸ்ரீ வரதம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கட்டுரை போட்டியில் கலந்து கொண்டார்கள்,  முனைவர் ராஜா, ஜெயமணி, சேகர் உள்ளிட்டோர் புதிய புரவலர்களாக இணைந்து கொண்டார்கள், இறுதியில் கடலூர் மாவட்ட பொது நூலக இரண்டாம் நிலை நூலகர் ஜோதி நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram