மகாலிங்கபுரம் சாலையோர கடைகளை அகற்ற மாட்டோம் சிஐடியு தலைவர்களிடம் துணை ஆணையர் உறுதி
17 Feb 2026, 3:36 pm
<p><strong>மகாலிங்கபுரம் சாலையோர கடைகளை அகற்ற மாட்டோம் சிஐடியு தலைவர்களிடம் துணை ஆணையர் உறுதி</strong></p>
<p>சென்னை, பிப். 17 - லயோலா கல்லூரி சுற்றுச்சுவரை யொட்டியுள்ள சாலையோர கடைகளை அகற்ற சாலையோர விற்பனையாளர்கள் மற்றும் சிறுகடை தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 110வது வட்டம், மகாலிங்கபுரத்தில் லயோலா கல்லூரி சாலையோரமாக 10 ஆண்டுக்கும் மேலாக வியாபாரிகள் வியா பாரம் செய்து வருகின்றனர். மாநகராட்சி கணக்கெடுப்பு நடத்தி அடையாள அட்டை வழங்கியுள்ளது. இந்த நிலையில், பிப்.12 அன்று முன்னறிவிப்பின்றி 110வது வட்ட இணை பொறியாளர் சரவணன், கடை களை அகற்றுமாறு வியாபாரிகளை மிரட்டி யுள்ளார். ஒருசில கடைகளையும் அப்புறப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கௌஷிக்கிடம், சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.முருகேஷ், நகர விற்பனைக்குழு உறுப்பினர்கள் ஜான் டிசில்வா, நதியா, செல்வம் ஆகியோர் மனு அளித்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட அவர், கடைகள் அப்புறப்படுத்த மாட்டோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விசாரித்து, நகர விற்பனைக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்றார். மேலும், நகர விற்பனைக்குழு உறுப்பி னர்களுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், அலுவலகம் ஏற்பாடு செய்வதோடு பயணப்படி வழங்க வும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.</p>
<p> </p>
