முந்தய பக்கம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டம் வருகை

4 Dec 2025, 3:52 pm
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  இன்று விழுப்புரம் மாவட்டம் வருகை
<p><strong>துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் &nbsp;இன்று விழுப்புரம் மாவட்டம் வருகை</strong></p> <p>விழுப்புரம், டிச.4- விழுப்புரத்திற்கு வெள்ளிக்கிழமை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருவதை முன்னிட்டு, &nbsp;மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தின் உள்ளே உள்ள &nbsp;பூங்காவை, விழுப்புரம் நகராட்சிப் பணியாளர்கள் வியாழனன்று (டிச.4) வேக வேகமாகச் சீரமைத்தனர். வானிலை அறிக்கைப்படி வரும் 9-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்பதற்கு ஏற்ப, வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது மழை &nbsp;பெய்தது. இதனால் சீரமைப்புப் பணியைச் செய்த பணியாளர்கள், அங்கு பல நாட்களாக வளர்ந்திருந்த புற்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றை அவசர அவசரமாக அகற்றினர். மேலும், அங்கு தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றுவார்களா என்று அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்பார்த்தனர். இதற்கு விடையளிக்கும் வகையில், நகராட்சி அதி காரிகள் மோட்டார் வைத்து நீரை வெளியேற்றினர். ஆனாலும், எவ்வளவுதான் தண்ணீரை வெளி யேற்றினாலும், ஏரியில் அமைக்கப்பட்ட அந்தப் பூங்காவில் நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. இதனால் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram