துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிருஷ்ணகிரிக்கு நாளை வருகை
11 Mar 2026, 4:32 pm
<p><strong>துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிருஷ்ணகிரிக்கு நாளை வருகை</strong></p>
<p>கிருஷ்ணகிரி,மார்ச் 11- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின் மார்ச் 13, (வெள்ளிக்கிழமை) தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசு நலத்திட்ட உதவி களை வழங்க உள்ளார். காலை 10 மணியள வில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளா கத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தருமபுரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் வரும் அவர், மாலை 4.30 மணியளவில் பையூர் சந்திப்பில் கட்சி சார்பில் நடைபெறும் கொடியேற்று நிகழ்ச்சி யில் பங்கேற்கிறார். மாலை 5மணியளவில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் நடைபெறும் பிரமாண்ட அரசு விழா வில் பங்கேற்கிறார். இவ்விழாவில் ஆயி ரக்கணக்கான பயனாளி களுக்குப் பல்வேறு துறை களின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மார்ச் 14 அன்று இரவு கிருஷ்ணகிரியில் தங்கும் அவர், மறுநாள் சனிக்கிழமை காலை பர்கூர் ஒப்பதவாடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டுத் தருமபுரி வழியாகத் சென்னை திரும்புகிறார். துணை முதலமைச்சர் வருகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே விழா மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பயனாளிகள் அமரும் இடங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளைப் பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக கிழக்கு மாவட்டச் செயலாளருமான தே.மதிய ழகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். விழா நடைபெறும் இடத்தில் குடிநீர் வசதி, கழி வறை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பயனாளிகள் வந்து செல்வ தற்கான போக்குவரத்து வசதிகள் குறித்து அதிகாரி களுடன் விரிவாக ஆலோ சிக்கப்பட்டது.</p>
