முந்தய பக்கம்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

24 Nov 2025, 3:26 pm
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
<p><strong>துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்</strong></p> <p>திருவள்ளூர், நவ.24- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி சுந்தர சோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.333.26 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார். மேலும் ரூ.137.38 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து 1,12,294 பயனாளி களுக்கு ரூ.1000.34 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் ச.சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சுதர்சனம், வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், டி.ஜே.கோவிந்தராஜன், க.கணபதி, துரை சந்திர சேகர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், திரு வேற்காடு நகர்மன்றத் தலைவர் என்.இ.கே.மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram