முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் ஜல்லிக்கட்டு மைதானம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Jan 2026, 3:00 pm
<p><strong>முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் ஜல்லிக்கட்டு மைதானம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, ஜன.16- திருச்சிராப்பள்ளி மாவட்டம் திரு வெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூரியூரில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் – ஜல்லிக்கட்டு மைதானத்தை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டா லின் வியாழனன்று திறந்து வைத்து, வாடிவாசலில் கோவில் காளைகளை கொடியசைத்து வழியனுப்பினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் பேசுகையில், “பெருமை வாய்ந்த சூரியூர் மண்ணில், அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கத்தில் ஜல்லிக் கட்டு அரங்கத்தை உங்களுடன் சேர்ந்து திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி, பெருமை. விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைத்திருக்கின்றோம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் இந்த ஜல்லிக்கட்டு மைதானப் பணிகளுக்கு நானே இங்கு வந்து அடிக்கல் நாட்டி னேன். இந்த பணிகளை நான்தான் தொடங்கி வைத்தேன். பத்தே மாதங் களில் அனைத்து பணிகளும் நடந்து முடிந்து, இன்றைக்கு, இந்த மைதானம், போட்டிக்கு தயாராகி ஆகியுள்ளது. எனவே இந்த மைதானத்தை கிராம மக்கள் உங்களிடத்தில் நான் ஒப்படைக்கின் றேன். நம்முடைய அரசு எந்த அளவிற்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது என்ப தற்கு ஒரு சிறிய உதாரணம்தான் இந்த சூரியூர் கிராமத்தில் அமைக்கப் பட்டுள்ள இந்த மைதானம் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். ஜல்லிக்கட்டுக்கான எல்லா அடிப்படை வசதிகளும் கொண்ட அரங்கமாக இந்த அரங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது. பக்கத்தில் இருக்கின்ற புதுக் கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சிவ கங்கை, மதுரையில இருந்தும் காளை களும், மாடுபிடி வீரர்களும் இங்கே வந்து போட்டியில் கலந்து கொள் கிறார்கள். அதனால், திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, இந்த மண்டலத்துக்கே பயன்படக்கூடிய வகையில் இந்த மைதானம் அமைக்கப்பட்டு இருக் கிறது’’ என்றார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சி யர் வே. சரவணன் உள்பட ஜல்லிக் கட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஜமால் முகமது கல்லூரியில் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான பூப்பந்தாட்ட போட்டியைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். </p>
