தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னையில் ரியல் எஸ்டேட் கண்காட்சி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கிவைத்தார்

20 Feb 2026, 2:39 pm
சென்னையில் ரியல் எஸ்டேட் கண்காட்சி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கிவைத்தார்
<p><strong>சென்னையில் ரியல் எஸ்டேட் கண்காட்சி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கிவைத்தார்&nbsp;</strong></p> <p>சென்னை, பிப். 20: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், கிரெடாய் சென்னை அமைப்பு நடத்தும் 18-வது &lsquo;பேர்ப்ரோ 2026&rsquo; ரியல்எஸ்டேட் கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளியன்று (பிப்,20) &nbsp;தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி &nbsp;பிப்ரவரி 22-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. &nbsp;இந்த ஆண்டு கண்காட்சியில் 80-க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட திட்டங்களைக் காட்சிப்படுத்தியுள்ளன. இதில் ரூ. 15 லட்சம் முதல் ரூ. 15 கோடி வரையிலான விலையில் அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள் மற்றும் வணிக வளாகங்கள் என மொத்தம் 52,586 சொத்துக்கள் விற்பனைக்கு உள்ளன. இக்கண்காட்சியின் மூலம் சுமார் 500 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக கிரெடாய் சென்னை தலைவர் முகமது அலி தெரிவித்தார். முன்னாள் தலைவர் எஸ். சிவகுருநாதன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மோதிஷ் குமார்ஆகியோர், நகரின் விரிவாக்கம் காரணமாகரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி கண்டு வருவதாகவும், மக்கள் பல்வேறு திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து சரியான விலையில் வீடுகளை வாங்க இது சிறந்த வாய்ப்பு என்றும் கூறினர். பாரத ஸ்டேட் வங்கி (SBI) இக்கண்காட்சியில் சிறப்பு வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. சுமார் 50 ஆயிரம் பார்வையாளர்கள் வருவார்கள் என &nbsp;எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.