தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ. 326.93 கோடி நலத்திட்ட உதவிகள் கிருஷ்ணகிரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

16 Mar 2026, 4:46 pm
ரூ. 326.93 கோடி நலத்திட்ட உதவிகள்  கிருஷ்ணகிரியில்  துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
<p><strong>ரூ. 326.93 கோடி நலத்திட்ட உதவிகள் &nbsp;கிருஷ்ணகிரியில் &nbsp;துணை முதல்வர் &nbsp;உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்</strong></p> <p>கிருஷ்ணகிரி, மார்ச் 16- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, ரூ. 326.93 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். &nbsp;மேலும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற பணி களையும் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குவருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மொத்தம் 10,709 பயனாளிகளுக்கு ரூ. 326.93 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். புதிய திட்டங்கள், திறப்பு விழா முடிவுற்ற பணிகள்: மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதி மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ. 41.51 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 500 திட்டப் பணிகளை அவர் திறந்து வைத்தார். அடிக்கல் நாட்டுதல் &nbsp;ரூ. 147.92 கோடி மதிப்பீட்டில் 709 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மாலூர் - ஓசூர் - அதியமான்கோட்டை சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி (ரூ. 24 கோடி) மற்றும் தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி - நாட்றம்பாளையம் பகுதிகளில் உயர்மட்டப் பாலம் கட்டும் பணிகள் (ரூ. 60 கோடி) குறிப்பிடத்தக்கவை. பள்ளிக் கல்வித்துறை நபார்டு நிதித் திட்டத்தின் கீழ் ஓசூர் பாரதியார் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. 2.35 கோடியில் 10 வகுப்பறைகள், பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.88 கோடியில் 8 வகுப்பறைகள் மற்றும் வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 2.35 கோடியில் 10 வகுப்பறைகள் கட்டும் பணிகள் நிறைவு பெற்றுத் திறந்து வைக்கப்பட்டன. இதர பணிகள் நீர்வளத் துறையின் சார்பில் ரூ. 4 கோடியில் கிருஷ்ணகிரி அணை இடதுபுற ஊற்றுக் கால்வாயைப் புனரமைக்கும் பணி மற்றும் ஓசூரில் ரூ. 30.20 கோடியில் புதிய ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடம் கட்டும் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பங்கேற்றோர் இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர்கள் கே. மதியழகன் (பர்கூர்), ஒய். பிரகாஷ் (ஓசூர்), டி. ராமச்சந்திரன் (தளி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, துணை மேயர் எம். ஆனந்தைய்யா, மாநகராட்சி ஆணையாளர் முகமது ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, ஓசூர் சாராட்சியர் ஆக்ரிதி சேத்தி, கோட்டாட்சி யர் ஷாஜகான் உள்ளிட்ட அரசு உயர் அலு வலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.