முந்தய பக்கம்

ரூ.254.59 கோடியில் நலத்திட்ட உதவிகள் துணை முதல்வர் உதயநிதி வழங்கல்

13 Mar 2026, 4:52 pm
ரூ.254.59 கோடியில் நலத்திட்ட உதவிகள் துணை முதல்வர் உதயநிதி வழங்கல்
<p><strong>ரூ.254.59 கோடியில் நலத்திட்ட உதவிகள் துணை முதல்வர் உதயநிதி வழங்கல்</strong></p> <p>தருமபுரி, மார்ச் 13- தருமபுரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 28,639 பயனாளிகளுக்கு ரூ.254.59 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் வெள்ளியன்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாவட்டத்தில் ரூ.15.39 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 33 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து, ரூ.33.96 கோடி மதிப்பீட்டில் 421 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 28,639 பயனாளிகளுக்கு ரூ.254.59 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் வேளாண்மை &ndash; உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், திமுக மாவட்ட முன்னாள் செயலாளர்கள் தர்மசெல்வன், தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், நகராட்சித் தலைவர் லட்சுமி, பேரூராட்சித் தலைவர்கள் பி.கே.முரளி, வடமலை முருகன், துணைத்தலைவர் சூர்யா தனபால், திமுக நகரச் செயலாளர்கள் நாட்டான் மாது, கெளதம், முல்லை ரவி, ஒன்றியச் செயலாளர்கள் காவேரி, ஏ.எஸ்.சண்முகம், பெரியண்ணன், வைகுந்தம், மல்லமுத்து, செங்கண்ணன், சரவணன், ஆர்.வேடம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram