புதிய செயற்கையிழை ஓடுதளப்பாதை பணி துணை முதல்வர் அடிக்கல் நாட்டி வைத்தார்
31 Dec 2025, 3:37 pm
<p><strong>புதிய செயற்கையிழை ஓடுதளப்பாதை பணி துணை முதல்வர் அடிக்கல் நாட்டி வைத்தார்</strong></p>
<p>சேலம், டிச.31- கருப்பூரில் அமைக்கப்பட்டு வரும் பல்நோக்கு விளையாட்ட ரங்கத்தில் ரூ.11.40 கோடி மதிப் பீட்டில் புதிய செயற்கையிழை ஓடு தளப்பாதை அமைக்கும் பணிக்கு சென்னையிலிருந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதனன்று அடிக்கல் நாட்டி வைத்தார். இதனை தொடர்ந்து, சேலம், கருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் மாவட்ட ஆட்சியர் இரா. பிருந் தாதேவி கலந்து கொண்டு பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 2021-ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் சேலம் மாவட்டத்தில் ரூ.20 கோடி மதிப் பீட்டில் பல்நோக்கு விளையாட்ட ரங்கம் பொதுமக்களின் பயன்பாட் டிற்காக அமைக்கப்படும்” என அறி வித்தார். அந்தவகையில், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி அரு கில் 18.06 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் சார் பில் கடந்த 02.08.2025 அன்று இப் பணியினை ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் காணொலி மூல மாக துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்து பணிகள் நடைபெற்று வரு கிறது. இப்பல்நோக்கு விளையாட்ட ரங்கில் ரூ.11.40 கோடி மதிப்பீட்டில் புதிய செயற்கையிழை ஓடுதளப் பாதை (Synthetic Track) அமைப் பதற்கான பணியினை புதனன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்துள் ளார்கள். இப்பல்நோக்கு விளை யாட்டரங்கில் 400 மீட்டர் ஓடுதளம், கைப்பந்து மைதானம், ஸ்கேட் டிங் மைதானம், கைப்பந்து மைதா னம், டென்னீஸ் மைதானம், கோ கோ மைதானம், ஜிம்னாஸ்டிக் மைதா னம், கூடைப்பந்து மைதானம், ஹாக்கி மைதானம், உடற்பயிற்சி கூடம், நீச்சல்குளம், நிர்வாக அலு வலகம், விளையாட்டு விடுதி, உள் விளையாட்டரங்கம் ஆகிய விளை யாட்டு திடல்கள் அமையவுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட விளை யாட்டு அலுவலர் எஸ்.சிவரஞ்சன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், திரு.தனபால் விளை யாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
