முந்தய பக்கம்

திருவண்ணாமலையில் சுற்றுச்சூழல் பூங்கா துணை முதல்வர் திறந்துவைத்தார்

5 Dec 2025, 4:21 pm
திருவண்ணாமலையில் சுற்றுச்சூழல் பூங்கா துணை முதல்வர் திறந்துவைத்தார்
<p><strong>திருவண்ணாமலையில் சுற்றுச்சூழல் பூங்கா துணை முதல்வர் திறந்துவைத்தார்</strong></p> <p>திருவண்ணாமலை, டிச. 5- திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் உள்ள எடப்பாளையம் ஏரியில் 33 ஏக்கர் நிலப்பரப்பில், 2 கிலோமீட்டர் சுற்றளவில் புதிதாக அமைக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலாப் பூங்காவை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (டிச. 5) திறந்து வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்வில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அந்தியூர் ப.செல்வராஜ், சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் தெ.பாஸ்கர பாண்டி யன், மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், துணை மேயர் சு.ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராம்பிரதீபன், நெடுஞ்சாலைத் துறை சிறப்புத் தொழில்நுட்ப அலுவலர் பொறி. ஆர்.சந்திரசேகர், தலைமைப் பொறியாளர் (திட்டங்கள்) ஆர்.கிருஷ்ணசாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனி ருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram