போக்குவரத்து தொழிலாளர்களின் அரசியல் உரிமைகளைப் பறிப்பதா?
8 Apr 2026, 5:30 am

போக்குவரத்து தொழிலாளர்களின் அரசியல் உரிமைகளைப் பறிப்பதா?

கோவை மண்டல போக்குவரத்து தொழிலாளர்களின் அரசியல் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைக்கு சிஐடியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கோவை மண்டல அரசுப் போக்குவரத்து கழகப் பொது மேலாளர், தொழிலாளர்கள் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடாது என்றும், வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும் கூறி சில தொழிலாளர்களுக்குத் தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையானது இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகும் என்று சிஐடியு சுட்டிக்காட்டியுள்ளது.