தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

26 மாதங்களாக ஊதிய உயர்வை மறுப்பதா? மாநிலம் முழுவதும் மின் ஊழியர்கள் போராட்டம்

11 Mar 2026, 4:32 pm
26 மாதங்களாக ஊதிய உயர்வை மறுப்பதா? மாநிலம் முழுவதும் மின் ஊழியர்கள் போராட்டம்
<p><strong>26 மாதங்களாக ஊதிய உயர்வை மறுப்பதா? மாநிலம் முழுவதும் மின் ஊழியர்கள் போராட்டம்</strong></p> <p>சென்னை, மார்ச் 11 - 26 மாதங்களாக ஊதிய உயர்வு மறுக்கப்பட்டு வரு வதைக் கண்டித்து புதனன்று &nbsp;(மார்ச் 11) மாநிலம் முழு வதும் மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் ஊழியர்களுக்கு 1.12.2023 முதல் புதிய ஊதிய &nbsp;ஒப்பந்தம் அமலுக்கு வந்தி ருக்க வேண்டும். ஆனால், 26 மாதங்களை கடந்தும் ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப் படாமல் உள்ளது. தொழிற் சங்கங்களுடன் வாரியம் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி வரைவு அறிக்கை யை அரசு அனுப்பி உள் ளது. ஆனால், அதற்கு அரசு ஒப்புதல் அளிக்காமல் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஒப் பந்தத்தை இறுதி செய்து 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு மற்றும் 26 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், கேங்மேன்களை கள உதவியாளராக பதவி மாற்றம் செய்ய வேண்டும். கேங்மேன் உள்ளிட்டோ ருக்கு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய 6 சதவிகித ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் காண குழு அமைக்க வேண்டும், விடு பட்ட 1035 பகுதி நேர பணியாளர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும், பொறி யாளர் மற்றும் அலுவலர் களுக்கும் ஊதிய உயர்வு தர வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் முழுவதும் &nbsp;மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் அறவழிப் போராட்டத்தை நடத்தினர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு), தமிழ்நாடு மின்சாரத் தொழி லாளர் சம்மேளனம். தமிழ்நாடு மின்வாரிய பாட்டாளி தொழிற்சங்கம், டான்ஜெட்கோ யூனி யன், தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனை சேஷன் ஆகிய அமைப்பு கள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தின. இதன் ஒருபகுதியாக சென்னை கே.கே. நகர் மேற்பார்வை பொறி யாளர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர் களிடம் பேசிய தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செய லாளர் தி. ஜெய்சங்கர், &ldquo;ஊதிய உயர்வு இறுதி வரைவு நகலை அனைத்து சங்கங்களுக்கும் உடன டியாக வழங்க வேண்டும். தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறை வேற்றும் வகையில் அந்த வரைவு அறிக்கை இருக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக முத்தரப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்து அமல்படுத்த வேண்டும்&rdquo; என்றார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலை வர் எஸ். கண்ணன், காஞ்சி மண்டலச் செயலாளர் ஏ. &nbsp;முருகானந்தம், தென் சென்னை கிளை-1ன் தலைவர் டி.பண்டாரம் பிள்ளை, செயலாளர் குமார், பொருளாளர் பழனி, தென்சென்னை கிளை-2ன் தலைவர் டில்லிகுமார், செயலாளர் எம்.ஹெலன் தேவகிருபை, பொருளாளர் பிரபுதேவா, பொறியாளர் அமைப்பின் மாநிலச் செய லாளர் ஆதன் இளங்கீரன் உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.