முந்தய பக்கம்

டெங்கு, உண்ணிக் காய்ச்சல் தடுப்பு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு

26 Sept 2026, 10:08 pm
டெங்கு, உண்ணிக் காய்ச்சல் தடுப்பு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு

டெங்கு, உண்ணிக் காய்ச்சல் தடுப்பு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு

புதுக்கோட்டை, செப். 26- கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செஞ்சுருள் சங்கம் சார்பில் டெங்கு, உண்ணிக்காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் சா.அப்துல் சலாம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் சிறப்புரை

யாற்றினார். வீடுகள் மற்றும் சுற்றுப்பு

றங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து தூய்மைப்படுத்த வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் சுய மருத்துவம் மேற்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றார்.

தமிழ்துறை செஞ்சுருள் சங்க இணைச் செயலாளர் மு.சசிக்குமார், அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ஆர். பிச்சைமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram