நெல்லையில் 8 பேருக்கு டெங்கு; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்: மாவட்ட ஆட்சியர் பேட்டி
24 Sept 2026, 9:32 pm

நெல்லையில் 8 பேருக்கு டெங்கு; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்: மாவட்ட ஆட்சியர் பேட்டி

பாளையங்கோட்டை ராஜேந்திரன் நகரில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதனை ஆட்சியர் பார்வையிட்டார்.

திருநெல்வேலி,செப்.24-நெல்லை மாவட்டத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனஎன்று மாவட்ட ஆட்சியர்ஆனந்த்மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெல்லையில் வியாழக்கிழமையன்று செய்தியாளர்களிடம் ஆட்சியர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நெல்லை மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், லார்வாக்களை கண்டறிந்து அழிக்கவும் கொசு தடுப்புப் பணியாளர்களின் எணணிக்கை 600-ல் இருந்து1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமங்கள் மற்றும் வார்டுகளில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டால், உடனடியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த மாதத்தில் மாவட்டத்தில் 8 பேருக்கு மட்டுமே டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக 354 பேருக்கு உள்நோயாளிகளாக சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழைக்காலம் தொடங்கவுள்ளதால், வீடுகளின் அருகில் தேங்காய் சிரட்டைகள், பாட்டில்கள் மற்றும் டயர்களில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகாமல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதுபொது மக்களின் கடமையாகும். மேலும், குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்கப்படுவதை சுகாதார துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.