டெங்கு தடுப்பு, விழிப்புணர்வு பணி: செயல் அலுவலர் ஆய்வு
26 Sept 2026, 10:06 pm

டெங்கு தடுப்பு, விழிப்புணர்வு பணி: செயல் அலுவலர் ஆய்வு

தஞ்சாவூர், செப். 26- தஞ்சாவூர் அருகே வல்லம் பேரூராட்சியில், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் குறித்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் களப்பணியாளர்களுடன் செயல் அலுவலர் ராஜசேகரன் நேரில் சென்று ஆய்வு செய்து, வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர்தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.வல்லம் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் செயல் அலுவலர் ராஜசேகரன் தலைமையில் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. வீடுகள், குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், காலி இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம்பயன்படுத்தும் பகுதிகளில் கொசு உற்பத்திக்கான வாய்ப்புகள் உள்ளதா என நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

வீடுகளில் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்காக சேமித்து வைக்கப்படும் தண்ணீரை மூடி வைத்திருக்க வேண்டும். மேல்நிலை மற்றும் தரைமட்ட தண்ணீர் தொட்டிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும். வீட்டின் மாடி, பின்புறம் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்

்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்களுக்கு செயல் அலுவலர் ராஜசேகரன் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.