தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்கு மண்டலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகம்: மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்

27 Sept 2026, 9:47 pm
மேற்கு மண்டலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகம்:  மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்

மேற்கு மண்டலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகம்: மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்

தஞ்சாவூர், செப். 27- தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது என மருத்துவக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) வி.லோகநாயகி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “அனைத்து இடங்களிலும் காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகிறது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக 25 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில்டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு மண்டலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதேபோல், காஞ்சிபுரத்திலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழ்நாடு அளவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப் படுவோர் அனைவரும் குண மடைந்து வருகின்றனர். டெங்கு காய்ச்சல்குறித்து அச்சமடையத் தேவையில்லை. மருத்துவக் கண்காணிப்பில்இருந்தாலே 80 சதவீத வைரஸ் காய்ச்சல்கள் தானாகவே குணமாகிவிடும்.

காலியாக உள்ள செவிலியர், செவிலிய உதவியாளர் பணியிடங் களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான அறிவிப்பு ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும்’’ என்றார். அப்போது, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் இ. மணிமேகலா, மருத்துவக் கண்காணிப்பாளர் சி. ராமசாமி, துணை முதல்வர் என். ஆறுமுகம், நிலைய மருத்துவஅலுவலர் ஏ. செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.