பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்
8 Jan 2026, 2:44 pm
<p><strong>பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>ஈரோடு, ஜன.8- பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியு றுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக உயர்த்தப்பட்டது. தற்போது பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தவுடு, கலப்பு தீவனம் மற்றும் கால் நடைகளின் விலை பல மடங்கு உயர்ந் துள்ளது. தற்போது வழங்கப்படும் கொள்முதல் விலை கட்டுபடியாகாது. இதை கணக்கில் கொண்டு பால் கொள் முதல் விலையை ஒரு லிட்டருக்கு பத்து ரூபாய் வீதம் உயர்த்தி வழங்க வேண் டும். அதன்படி, பசும்பால் லிட்டர் ஒன் றுக்கு ரூ.45 மற்றும் எருமைப்பாலுக்கு ரூ.60 என கொள்முதல் விலை அறிவிக்க வேண்டும். கால்நடை தீவனங்களை 50 விழுக்காடு மானிய விலையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஈரோடு மாவட்டம், உக்கரம் பால் சொசைட்டி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட் டக்குழு உறுப்பினர் சா.க.அருள்மொழி தலைமை வகித்தார். இதில் மாவட்டத் தலைவர் கே.எம்.விஜயகுமார், சிபிஎம் தாலுகா செயலாளர் எம்.முருகன் உட் பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று, அந்தியூர், கள்ளிமடை குட்டை மகளிர் பால் உற்பத்தியாளர் சங் கத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கணேசன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரிமுத்து சிறப்புரையாற்றி னார். அரியப்பம்பாளையத்தில் மாவட் டக்குழு உறுப்பினர் ஏ.கே.செல்லிகவுண் டர், சுக்காநாயக்கனூரில் மாவட்டச் செயலாளர் என்.பிரகாசம், சலங்க பாளையத்தில் மாவட்டக்குழு உறுப்பி னர் பி.ஆர்.வெங்கடாசலம், சீலும்பட்டி யில் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரமூர்த்தி, குருவரெட்டியூரில் மாவட்டப் பொருளாளர் பி.ஆனந்தராசு ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம். முனுசாமி, தாலுகா நிர்வாகிகள் பி. கணேஷ், எம்.ஆர்.பெரியசாமி, கே. ஆர்.சண்முகம், பி.முத்து பழனிசாமி, வி.எஸ்.மணியன், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் சி.பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், மோளியப் பள்ளி பால் சொசைட்டி முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாயி கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஆர்.வேலாயுதம் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன், ஒன்றி யத் தலைவர் சி.பெரியசாமி, செயலா ளர் ஆர்.குப்புசாமி, பொருளாளர் பெரி யசாமி உட்பட பலர் கலந்து கொண் டனர். இதேபோன்று, திருச்செங்கோடு அருகே உள்ள விட்டம்பாளையத்தில் மாவட்ட துணைத்தலைவர் ஏ.ஆர். முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாரா யணன், துணைத்தலைவர் ஆர்.வேலா யுதம், சிஐடியு நிர்வாகி ஐ.ராயப்பன், சிபிஎம் நகரச் செயலாளர் எஸ்.சீனிவா சன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பறையங்காட்டனுர் பால் உற் பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தின் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் நிர்வாகிகள் நல்லமுத்து, சுப்பிரமணி, கார்த்திகேயன் உட்பட திரளானோர், கறவை மாடுகளுடன் கலந்து கொண் டனர். இதேபோல் ஓமலூர், கொங்க ணாபுரம், வாழப்பாடி, ஆத்தூர் உள் ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அரியாக்கவுண்டர் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
