மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
1 Dec 2025, 5:20 pm
<p><strong>மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>உடுமலை, டிச.1- பதிவு செய்த அனைத்து மாற்றுத்திறனா ளிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ணில் கருப்பு துணி கட்டி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் திங்களன்று குறிச்சிக்கோட்டை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் உடு மலை தாலுகா செயலாளர் பாலசுப்பிரம ணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாத உதவித்தொகை கேட்டு இணையதளத்தில் பதிவு செய்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக பட்டா வழங்க ஆவணம் செய்ய வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெற்றுவந்த கடும் மாற்றுத்திறனாளிகள் மாத உதவித் தொகை ஆறு மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதை உடனடியாக வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிக ளுக்கு நூறு நாள் வேலை திட்டத்தில் மாவட்டம் முழுவதும் இலகுவான வேலைகள் வழங்கி முழு ஊதியம் வழங்க வேண்டும். மேலும் நக ராட்சி மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட கடைக ளில் 5% இட ஒதுக்கீட்டின் படி மாற்றுத்திறனா ளிகளுக்கு கடைகள் ஒதுக்க வேண்டும் என் பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், மாநிலச் செயலாளர் ராஜேஷ், மாவட்டத் தலைவர் லோகநாதன், மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, மாவட்டப் பொரு ளாளர் ரோசி, மாவட்ட துணைத் தலைவர் மாலினி, மாவட்ட துணைச் செயலாளர் குரு சாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர்.</p>
