வாக்குரிமையை பாதுகாக்க நாளை ஆர்ப்பாட்டம்
9 Nov 2025, 2:37 pm
<p><strong>வாக்குரிமையை பாதுகாக்க நாளை ஆர்ப்பாட்டம் </strong></p>
<p>திரளாக பங்கேற்க பெ.சண்முகம் அழைப்பு சென்னை, நவ. 9 - மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை பாதுகாக்க நவம்பர் 11 (நாளை) மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கு மாறு பொதுமக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளி யிட்டுள்ள பதிவில், வாக்குரிமை மற்றும் குடியுரிமை இரண்டுமே இந்திய அரசியல் சாசனம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த உரிமை களை பறிக்க எஸ்.ஐ.ஆர். என்ற போர்வையில் தேர்தல் ஆணைய மும் ஒன்றிய பாஜக அரசும் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டுள்ள தாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சதியை முறியடிக்க வும், மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்கவும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிற ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று தங்களது கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.</p>
