இராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம்
13 Nov 2025, 3:30 pm
<p><strong>இராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>இராஜபாளையம், நவ.13- இராஜபாளையம் அருகே முகவூர் செட்டி யார்பட்டி பகுதியில் உள்ளூர் மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. முகவூர் அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முக வூர் கிளைச் செயலாளர் பரந்தாமன், செட்டியார்பட்டி கிளைச் செயலாளர் குரு சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். அழகர்சாமி, சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்ட குழு உறுப்பினர் ராமர், ஒன்றியச் செயலா ளர் சந்தனகுமார், கமிட்டி உறுப்பினர்கள் பொன்னுத் தாய், பரமேஸ்வரன் உள் ளிட்டோர் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினர். அதேபோல் கமிட்டி உறுப்பினர் கனகராஜ், தையல் சங்க மாவட்ட பொரு ளாளர் பானுப்பிரியா மற்றும் பலர் திரளாக பங்கேற்றனர்.</p>
