தியாகதுருகத்தில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கக்கோரி ஆர்ப்பாட்டம்
22 Dec 2025, 4:47 am
<p>கள்ளக்குறிச்சி, டிச.22 - தியாகதுருகம் ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை உடனடியாக தீர்க்கக்கோரி தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவ லகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் முழக்க போராட்டம் (டிச.22) திங்களன்று நடை பெற்றது. தியாகதுருகம் ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் 100 நாள் வேலையை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வழங்கி,சட்டக் கூலியை வழங்கவேண்டும், பருவ மழையால் தெருக்களில் கழிவு நீர் மற்றும் மழை நீர் தேங்கி வெளியேறாமல் இருப்பதாலும்,கால்வாய்களை சுத்தம் செய்து கொசு மருந்து அடிக்கவேண்டும், புதிய சிமெண்ட் சாலைகள் அமைத்து சுகா தாரத்தை மேம்படுத்த வேண்டும், கொங்க ராயபாளையம் கிராமத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடி யாக கட்டித் தரவேண்டும், கோவிந்தசாமி புரத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கிட நான்கு தெருக்களிலும் மினி டேங்க் அமைக்கவேண்டும், குடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர்கள்,செவிலியர்களை நியமித்து பணியில் உள்ள மருத்துவரை கிராமத்தி லேயே தங்கி பணியாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும், புதுஉச்சிமேடு கிராமத்தில் உள்ள இரண்டு சுடுகாட்டிற்கும் புதிய தார்சாலை அமைத்து தரவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இந்த தொடர் முழக்க போராட்டத்தில் வட்டச் செயலாளர் வே.ஏழுமலை தலைமை தாங்கினார்,மாவட்ட செயற்குழு பி.சுப்பிர மணியன், மாவட்ட குழு என்.தனலட்சுமி,அ.பா.பெரியசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். வட்டக் குழு ஆர்.செல்வ ராஜ்,பி.தெய்வீகன்,ஏ.நடேசன்,கே.ஜக்கரியா,பி.வேலு,கே.கொளஞ்சி,ஏ.இராமு, தியாக ராஜன், எஸ்.மஞ்சுளா,ஜீவானந்தம், முரு கேசன், சுப்பிரமணியன், முருகன் மற்றும் ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
