மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்கும் நூறு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
27 Feb 2026, 5:32 pm
<p><strong>மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்கும் நூறு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>தருமபுரி, பிப்.27- மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை இல்லாமல் செய்து, மேலும் வறுமை யில் தள்ளும் வி பி ஜி,ராம் ஜி திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மாற்றுத்திற னாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட் டத்தை ஒன்றிய பாஜக கூட்டணி அரசு ரத்து செய்து, விக்சித் பாரத் - வேலை வாய்ப்பு மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமிய) சட்டம்-2025யை (விபிஜி ராம் ஜி) கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டம், கிராப்புற மாற்றுத்திற னாளிகளின் வேலைவாய்ப்பை பறிக் கும் வகையில் கொண்டு வரப்பட்டுள் ளது. எனவே, மோசடியான புதிய சட் டத்தை மோடி அரசு திரும்பப்பெற்று, பழைய சட்டத்தை மீண்டும் அமல்ப டுத்த வேண்டும். நூறு நாள் வேலை செய்தவர்களுக்கு பாக்கியின்றி சம்ப ளத்தை உடனடியாக வழங்க வேண் டும். பட்டகப்பட்டி, ஜோதிப்பட்டி, கிரா மத்துக்கு ஒகேனக்கல் குடிநீர், மயா னத்தை சுத்தம் செய்து தகனமேடை அமைத்து கொடுக்க வேண்டும். குட்டப் பட்டி கிராமத்துக்கு கடந்த ஓராண்டு காலத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்கவில்லை. இதனை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாற் றுத்திறனாளிகள் சங்க மாவட்டப் பொருளாளர் மாதேசன் தலைமை வகித் தார். இதில் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எம்.மாரிமுத்து, மாவட்ட துணைச் செயலாளர் சி.வேலாயுதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா ளர் பி.காரல் மார்க்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
