தொழிலாளர் சட்டத்திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
1 Dec 2025, 5:20 pm
<p><strong>தொழிலாளர் சட்டத்திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>உடுமலை, டிச.1- தொழிலாளர் உரிமைக ளைப் பறித்து நான்கு சட்டத் தொகுப்புகளை நடைமு றைக்கு கொண்டு வந்திருக் கும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் உடும லையில் ஆர்ப்பாட்டம் நடத் தினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் உடுமலைப்பேட்டை வட்ட கிளை சார்பாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொழிலாளர் சட்டத் தொகுப்பை உடனடி யாக திரும்ப பெறக் கோரி திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளைச்செயலாளர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் பால கிருஷ்ணன், தாசன் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி யன் சிறப்புரை ஆற்றினார். மாநில துணைத் தலைவர் அம்சராஜ் நிறைவுரையாற்றினார். இதில், திரளானோர் பங்கேற்றனர்.</p>
