அமெரிக்காவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
4 Jan 2026, 5:55 pm
<p><strong>அமெரிக்காவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>வெனிசுலா நாட்டின் மீது அத்துமீறித் தாக்குதல் நடத்தியதுடன், அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் செயலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.கணேஷ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செ.ஏகலைவன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.டி.சங்கரி கண்டன உரையாற்றிப் போராட்டத்தை நிறைவு செய்தார் சிபிஎம் காட்பாடி தாலுகா செயலாளர் ஆர்.சுடரொளியன், விசிக மாநகர மாவட்டச் செயலாளர் வேலூர் பிலிப் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
