சிலிண்டர் தட்டுப்பாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
16 Mar 2026, 4:46 pm
<p><strong>சிலிண்டர் தட்டுப்பாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>உதகை, மார்ச் 16- சமையல் எரிவாயு தட்டுப் பாட்டை சரிவர கையாளத்தெரியா மல் மக்களை தவிக்கவிடும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து தமி ழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் சார்பில், திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் பா.மு.முபாரக் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. வினோத், காங்கிரஸ் கட்சியின் லாரன்ஸ் உள்ளிட்டோர் உரையாற் றினர். இதில் திரளான கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். கோவை கோவை, பொள்ளாச்சி காந்தி சிலை அருகில் மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் பொள்ளாச்சி தாலுகா குழு உறுப்பினர் கே.மகாலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச்சாமி, தாலுகா செயலாளர் மூ.அன்பரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், தபெதிக மாநில வெளியீட்டு செயலாளர் மனோகரன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் ஆனங்கூர் பிரிவு சாலை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு நகர செயலாளர் எஸ். கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர் சக்திவேல், முன் னாள் நகர செயலாளர் ஆறுமுகம் மற்றும் நகரப் பகுதி உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள் திர ளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.</p>
