சிறுபான்மையினர் வீடுகள், மயானம் இடித்து வேலி அமைப்பு
25 Mar 2026, 5:29 pm
<p><strong>சிறுபான்மையினர் வீடுகள், மயானம் இடித்து வேலி அமைப்பு</strong></p>
<p>நாமக்கல், மார்ச் 25- சிறுபான்மை மக்களின் வீடுகள் மற்றும் மயானத்தை இடித்து தரை மட்டம் செய்து வேலி அமைத்ததை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உஞ்சனை பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு வட்டம் உஞ்சனை கிரா மம் பவர் ஆபீஸ் அருகில் முஸ்லிம் தெருவில் கடந்த நூறு ஆண்டுக ளுக்கு மேலாக சிறுபான்மை சமூ கத்தைச் சேர்ந்த மக்கள் சர்வே எண் 107/2ல் வசித்து வருகின்றார் கள். ராயர்பாளையம், எலச்சி பாளையம், உஞ்சனை, உலகப் பம்பாளையம், எளையாம்பாளை யம், குமரமங்கலம் உள்ளிட்ட பகுதி யிலிருந்து இஸ்லாமியர்கள் யாரேனும் இறந்தால் இதே சர்வே எண்ணில் உடல் அடக்கம் செய்வது வழக்கம், தற்போது வரை 100க்கும் மேற்பட்ட உடல்கள் இவ்விடத்தில் புதைக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், தனிநபர் ஒரு வர் தவறுதலான கிரையங்களை பெற்றுக் கொண்டு அரசு அதிகா ரத்தை முழுமையாக பயன்படுத் திக் கொண்டு சிறுபான்மை மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு இதுவரை 7 முறை கிரையம் செய்துள்ளனர். மேலும், பாபு என்கின்ற தொழிலாளி, பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த வீட்டை கடந்த 10.10.2025 ஆம் தேதி யன்று ஜேசிபி எந்திரங்களை கொண்டு வந்து அவரது வீட்டை இடித்து அடக்கஸ்தலம் (மயானத்தை) தரைமட்டம் செய்து வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றார். இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்து சிஎஸ்ஆர் நெம்பர். 0417/2025 மட் டுமே வழங்கிவிட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் தற் போது வரை காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். மேலும் இவர்களது சமூகத்தில் யாரேனும் இறப்பு ஏற்பட்டால் சிறுபான்மை மக்களுக்கு சொந்தமான மயான நிலத்தில் உடல் அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போடப்பட் டுள்ள கற்களை அகற்றம் செய்ய வேண்டும். சிஎஸ்ஆர் மூலம் சம் பந்தப்பட்டவர்கள் மீது முதல் தக வல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும். கிராம கணக்கில் உள்ள மயான மார்க்கரை அளிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் செவ்வா யன்று உஞ்சனை பேருந்து நிறுத் தத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஒன்றியக் குழு உறுப்பினர் ஈஸ்வரன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் எஸ்.கந்த சாமி, தமிழ்நாடு சிறுபான்மை மக் கள் நலக்குழு மாவட்டத் தலைவர் கே.மோகன், சிபிஎம் முன்னாள் கவுன்சிலர் சு.சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ் மணி, மாவட்டக்குழு உறுப்பினர் கவிதா, எலச்சிபாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.ரமேஷ், கிழக்கு ஒன்றியச் செய லாளர் வீ.தேவராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு தலை வர் ஏ.பாபு நன்றி கூறினார்.</p>
