பெண் காவலருக்குப் பாலியல் துன்புறுத்தல் சிறப்பு காவல்படை எஸ்.பி. மீது கடும் நடவடிக்கை எடுக்க ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்!
17 Mar 2026, 3:26 pm
<p><strong>பெண் காவலருக்குப் பாலியல் துன்புறுத்தல் சிறப்பு காவல்படை எஸ்.பி. மீது கடும் நடவடிக்கை எடுக்க ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்!</strong></p>
<p>சென்னை, மார்ச் 17 - கோவையில் பெண் காவலருக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் புகார் எழுந்துள்ள சிறப்பு காவல் படை எஸ்.பி. செந்தில்குமார் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அதிகார அத்துமீறலும் பாதுகாப்பு அற்ற சூழலும் இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் அ. ராதிகா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறை அமைப்பிற்குள்ளேயே, ஒரு பெண் காவலர் அதிகார அத்துமீறலுக்கும் பாலியல் தொல்லைக்கும் ஆளாகியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் சந்திக்கும் சவால்களையும், அங்கு நிலவும் ஆணாதிக்க மனப்பான்மையையும் இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளனர். நேர்மையான விசாரணைக்குக் கோரிக்கை இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கு உதவியதாகத் துணை ஆய்வாளர் புஷ்பாகுமாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இன்னும் பலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புவதாகச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே: * விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பொறுப்புப் பதவிகள் வழங்கக் கூடாது. * புகார் அளித்த பெண் காவலருக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். * காவல்துறையில் ‘உள்புகார் குழு’ (ICC) முறையாகச் செயல்படுவதை உறுதி செய்து, பெண்கள் அச்சமின்றிப் பணியாற்றும் சூழலை அரசு உருவாக்க வேண்டும். பாலினச் சமத்துவம் நிலவும் பணிச்சூழலை உறுதி செய்யக் கண்காணிப்பு அமைப்புகளை உடனே ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜனநாயக மாதர் சங்கம் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.</p>
