காவல் நிலையம் அருகில் பெண் பெட்ரோல் ஊற்றி எரிப்பு ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம்
16 Mar 2026, 4:46 pm
<p><strong>காவல் நிலையம் அருகில் பெண் பெட்ரோல் ஊற்றி எரிப்பு ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம்</strong></p>
<p>புதுச்சேரி, மார்ச் 16- புதுச்சேரி காவல் நிலையம் அருகி லேயே பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் முனியம்மாள் மற்றும் செயலாளர் இள வரசி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்ட றிக்கையில் கூறியிருப்பதாவது: “புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது. பெண்கள் சாலைகளில் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியாத ஒரு சூழல் நிலவு கிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு முத்தி யால்பேட்டை பகுதியில் சிறுமி ஒருத்தி கயவர்களால் படுகொலை செய்யப்பட்டுச் சாக்கடையில் வீசப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. காவல்துறையின் அலட்சியம் இந்நிலையில், கடந்த மார்ச் 13-ஆம் தேதி இரவு 9 மணியளவில் அண்ணா சாலையில் உள்ள ஒரு பிரபல துணிக்கடை யில் வேலை முடித்துவிட்டுத் திரும்பிய உப்ப ளம் பகுதியைச் சேர்ந்த பெண், ஒதியஞ் சாலை காவல் நிலையம் அருகிலேயே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த வழக்கறிஞர் ஒருவர், உடனடியாக அருகில் இருந்த காவல் நிலை யத்திற்குப் புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால், அங்கிருந்த காவல்துறை அதி காரி புகாரைப் பெற மறுத்துள்ளார். இந்த மெத்தனப் போக்கை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. உயர்பதவியில் இருப்பவர்களுக்கோ அல்லது அரசியல் தலைவர்களுக்கோ இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பர். ஆனால், ஒரு சாதா ரண ஏழைப் பெண் என்பதால் காவல்துறை அலட்சியமாகச் செயல்பட்டுள்ளது. போராட்ட எச்சரிக்கை பாதிக்கப்பட்ட பெண்ணிற்குச் சரியான நீதி கிடைக்க வேண்டும். இக்கொடூரச் செய லில் ஈடுபட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில், தேர்தல் காலம் என்று கூடப் பார்க்காமல் புதுச்சேரி அரசுக்கு எதிராகப் பெண்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை செய்கிறோம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.</p>
