தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்கேன் இந்தியா

10 Jan 2026, 2:48 pm
                          ஸ்கேன் இந்தியா
<p><strong>ஸ்கேன் இந்தியா</strong></p> <p>ஜனநாயகச் சுவர்..? தில்லிப் பல்கலைக்கழகத்தின் பல கல்லூரிகளில் &ldquo;ஜனநாயகச் சுவர்கள்&rdquo; அமைக்கப்பட்டிருந்தன. மாணவர் அமைப்புகள் இவற்றில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்வது வழக்கமானதாகும். பல் கலைக்கழக மாணவர் பேரவையில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவு மாணவர் அமைப்புகள்தான் செல்வாக்கு செலுத்தி வந்தன. தேர்தல்களும் இந்த இரு அமைப்பு களுக்கிடையில்தான் போட்டியாக இருந்தன. அண்மை யில் இந்திய மாணவர் சங்கத்திற்கு (எஸ்எப்ஐ) ஆதரவு அதிகரித்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக, செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் தங்கள் சுவரொட்டி யை ஒட்டுவதற்காக மாணவர் சங்கத்தினர் சென்றபோது, ஜனநாயகச் சுவர் அகற்றப்பட்டு விட்டது என்று பாதுகாவ லர்கள் சொல்லியிருக்கிறார்கள். பதிவாளரோ ஒன்றுமே தெரியாதது போல, தூய்மைப் பணி நடப்பதால் சொல்லியி ருப்பார்கள் என்று கூறியிருக்கிறார். மாணவர்கள் கொந்த ளிப்பில் இருக்கிறார்கள். முழி பிதுங்கி.. பாஜகவின் புதிய செயல் தலைவராக நியமிக்கப் பட்டுள்ள நிதின் நபின் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்புகிறாராம். தன்னைத் தேர்வு செய்துவிட்டு, பாஜக பலவீனமாக உள்ள மாநிலங்க ளுக்கான தேர்தல்கள் வரவுள்ள வேளையில், நீங்கதான் ஜெயிக்குறதுக்குப் பொறுப்புனு சொல்றாங்களாம். அவருக்கு நெருக்கமானவர்களோ, &ldquo;அது கூடப் பரவா யில்ல.. 100 நாள் வேலைத்திட்டத்தை ரத்து செய்யுற கட்சியோட திட்டத்தை நியாயப்படுத்திப் பேசுங்க... அதுவும் தேர்தல் நடக்குற மாநிலங்கள்ல போய்ப் பேசுங்கன்னு சொல்லிருக்காங்க.&rdquo; என்கிறார்கள். எங்கே, எப்போது போக வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலைத் தலைமை அலுவலகமே தயாரித்து அவருக்கு வழங்கி விடும். இன்னும் சிலரோ, வழக்கமா வேற ஏதாவது பிரச்ச னையைக் கிளப்பி திசை திருப்பி விடுறதுதான நம்ம கட்சியோட வழக்கம். இவரு ஏன் இப்புடி முழிக்குறாரு என்கிறார்களாம். பசு பெயரில் மோசடி மத்தியப் பிரதேசம், ஜபல்பூரில் உள்ள நானாஜி தேஷ்முக் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் ஆய்வு &nbsp;ன்ற பெயரில் நிதி மோசடிகள் நடந்துள்ளன. பசுவின் சாணம், சிறுநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அனைத்துமே அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களுக்கு விமானப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்ததாகவும் கணக்கு எழுதியிருக்கிறார்கள். பசுவின் பொருட்கள் புற்றுநோயைக் குணமாக்குகிறது என்ற செய்தியை பரப்பி பணத்தை மோசடி செய்வது நாடு முழுவதும் நடக்கிறது என்பது ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். ஜபல்பூருக்குப் புதிதாக வந்த மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டதால் நிதி மோசடி அம்பலமாகியிருக்கிறது. இப்போதும் பல் கலைக்கழக பதிவாளர், மோசடி எதுவும் நடக்கவில்லை என்று சமாளிக்க முயற்சித்துள்ளார். ஆளுங்கட்சி பின்புலம் இருப்பதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஒருநாள் பெரும்பான்மை..! மகாராஷ்டிர மாநிலம், அம்பர்நாத் நகராட்சியில் கூட்டாளியான சிவசேனா (ஷிண்டே) கட்சியைக் காலி செய்ய காங்கிரஸ் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கிய பாஜக, பெரும்பான்மை பலத்தை ஒரேயொரு நாள் மட்டுமே வைத்திருந்தது. மற்றொரு கூட்டாளி யான தேசியவாத காங்கிரஸ் (அஜித்) தனது நான்கு கவுன்சிலர்களுடன் ஷிண்டே கட்சியோடு கை கோர்த்தி ருக்கிறது. துணைத்தலைவர் பதவி தருவோம் என்று &nbsp;சொல்லி ஏமாற்றி விட்டார்கள். மேலும் ஒரு சுயேச்சை &nbsp;என்று 59 உறுப்பினர்களைக் கொண்ட நகராட்சியில் 32 உறுப்பினர்களை இந்த அணியினர் பெற்றிருக்கின்றனர். நகரவைத் தலைவராக பாஜககாரர் தேர்வாகி விட்டா லும் கவுன்சிலில் எதையுமே செய்ய முடியாத நிலைமை. மீண்டும் குதிரைப் பேரத்தை பாஜக நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.