ஜனநாயகம் தகர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
yesterday

ஜனநாயகம் தகர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது

பிரிட்டிஷ் அரசியல் மேதையான சர் அந்தோனி ஈடன், இந்தியாவின் அரச மைப்புச் சட்டத்தை உருவாக்கும் செயல்முறை யை முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஒரு மகத்தான ஜனநாயக முன்னெடுப்பு என்று வெகுவாகப் பாராட்டியிருந்தார். அவர் இத னை மேற்கத்திய மாதிரிகளின் வெறும் நகலாகக் கருதாமல், உலகளாவிய அளவில் அளவிட முடி யாத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு துணிச்ச லான ஜனநாயக முயற்சியாகவே பார்த்தார். “இந்தியாவின் இந்த முயற்சி, எங்கள் சொந்த நடைமுறையின் ஒரு மங்கலான நகல் அல்ல; மாறாக, நாங்கள் கனவிலும் கருதாத பிரம்மாண்ட மான விரிவுபடுத்தப்பட்ட வடிவமாகும்” என்று அவர் புகழ்ந்துரைத்திருந்தார்.

பரந்த பன்முகத்தன்மை கொண்ட ஒரு மிகப்பெரிய மக்கள் தொகையை ஒன்றி ணைப்பதில் உள்ள பெரும் சவாலை உணர்ந்திருந்த அவர், “இது வெற்றிபெற்றால், ஆசியாவில் இதன் நற்பலன் சார்ந்த தாக்கம் அளவிட முடியாததாக இருக்கும்” என்றும் நம்பி னார். இந்திய அரசமைப்புச் சட்டத்தை வடி வமைத்தவர்களின் நோக்கங்கள் மீது ஈடன் தனது ஆழ்ந்த மரியாதையை இவ்வாறு வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தியாவைத் தற்போது ஆளும் கார்ப்பரேட்-இந்துத்துவா மதவெறிக் கூட்டணி நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைத் தகர்க்க முயற்சித்துக்கொண்டி ருக்கும் இன்றைய சூழலில், நாம் எதிர்கொள் ளும் சவால்களைக் கையாள்வதற்கு இந்தச் சிந்தனை முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கும், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு வித்திட்ட சுதந்திரப் போராட்டத்திற்கும் இடையே எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது தற்செயலான ஒன்றல்ல. இந்திய ஜனநாயகத்தின் கட்ட மைப்பை அமைக்கும்போது, நாட்டின் செழுமை யான பன்முகத்தன்மையும் பரந்த மக்கள் தொகை யும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியிருந்தது. இதில் மிகப்பெரிய சவாலாக அமைந்தது பெரும் பான்மைவாதத்தின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவதே ஆகும். எனவே, நம் அரசமைப்புச் சட்டம் இயல்பாகவே அனைவரையும் உள்ளடக்கி யதாக அமைய வேண்டியிருந்தது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொறுப்புக்கூறல் இன்மையும் தேர்தல் ஆணையத்தின் நெருக்கடியும்

கார்ப்பரேட்டுகளுக்கும், இந்துத்துவா மதவெறியர்களுக்கும் இடையிலான கூட்ட ணிக்கு ஆர்எஸ்எஸ் என்னும் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்’ ஒரு முக்கிய ஊற்றுக் கண்ணாகவும், அந்தச் செயல்முறையை முன்னெடுத்துச் செல்லும் சக்தியாகவும் திகழ்கிறது. தன் அமைப்பின் இருப்பு மற்றும் செயல்பாடுகள் பற்றிய உண்மைகளை வெளிப்ப டையாகத் தெரிவிக்க ஆர்எஸ்எஸ் மறுப்பது, பொறுப்புக்கூறல் (accountability) மீதான அதன் அலட்சியப் போக்கையே வெளிப் படுத்துகிறது. இதற்கு நேர்மாறாக, ஜனநாய கத்தின் அடித்தளமாக அமையும் வகையில், ஆட்சியாளர்கள் மக்களுக்குப் பொறுப்புடன் செயல்படுவதை உறுதி செய்வதில் இந்திய அரசமைப்புச் சட்டம் மிகுந்த கவனத்தையும் அக்கறையையும் செலுத்தியது.

நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பிற்கு முக்கிய ஆதாரமாக விளங்கியது, சுதந்திர மான மற்றும் வெளிப்படையான பல கட்சித் தேர்தல் முறையாகும். இது ‘இந்தியத் தேர்தல் ஆணையம்’ எனும் சுதந்திரமான அமைப்பின் மேற்பார்வையில் இயங்கக்கூடியதாக அமைக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்திற்கு இடையூறாக உள்ள தடை களை நீக்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஏனெனில், அது அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்திற்கும் மக்களின் உரிமைகளுக்கும் உண்மையாகச் செயல்படும் என்ற எதிர்பார்ப்பே இதற்குக் காரண மாக இருந்தது. ஆனால், தேர்தல் ஆணை யத்தின் சமீபத்திய செயல்முறைகள் அதன் மீது அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் முறையின் நம்பகத்தன்மையே கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

சிறப்புத் தீவிர திருத்தமும் பறிக்கப்படும் வாக்குரிமையும்

கெடுவாய்ப்பாக, ஆட்சியாளர்கள் மற்றும் நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள் மேற்கொள் ளும் அத்துமீறல்களிலிருந்து அரசமைப்புச் சட்டத் தையும், மக்களின் அடிப்படை உரிமைகளையும் காக்க வேண்டிய நீதித்துறையே, ‘அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப்’ பாது காப்பதில் தவறி வருகிறது. தேர்தல் ஜனநாய கமானது சுதந்திரமாகவும் நியாயமாகவும் அமைவதற்கு, ‘அனைவருக்கும் வாக்குரிமை’ மிக அடிப்படையான தேவை என்பதில் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் உறுதியாக இருந்தனர்.

ணையத்தால் தொடங்கப்பட்டு, பின்னர் மேலும் 12 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் ‘சிறப்புத் தீவிர திருத்த’ (SIR) செயல்முறை நடவடிக்கையானது, வாக்க ளிப்பதற்கான மக்களின் அரசமைப்புச் சட்ட உரிமையின் அடிப்படையையே தகர்ப்பதாக அமைந்துள்ளது. வாக்காளரின் குடியுரிமையைச் சரிபார்க்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாக இருந்தாலும், குடியுரிமையை உறுதி செய்வது என்பது அந்த அமைப்பின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட ஒன்றாகும். உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு இந்த வேறுபாட்டைத் தெளிவாக விளக்கியுள்ளது.

றுபாட்டைத் தெளிவாக விளக்கியுள்ளது. மேற்குவங்கத்தில் 27 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் படாவிட்டாலும், ‘நீதிவிசாரணைக்கு உட்பட்ட வை’ (Under Adjudication) என்ற விசித்திர மான வகைப்பாட்டின் கீழ் அவர்களின் வாக்கு ரிமை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. சட்டரீதியாகப் பார்க்கையில், இது சந்தேகத்திற்கு இட மின்றி அரசமைப்புச் சட்ட உரிமைகளை மறுப்ப தேயாகும். கணிசமான எண்ணிக்கையிலான மக்களின் இந்த உரிமையை இந்தியத் தேர்தல் ஆணையம் நடைமுறையில் பறித்ததாலும், வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாப்பதில் உயர் நீதித்துறை தவறியதாலும், இதனால் ஏற்பட்ட பாதிப்பு மிகக் கடுமையானதாக இருந்தது. இதில் மக்களின் சமூக, பொருளாதார மற்றும் மத ரீதியான சமத்துவம் முற்றிலும் ஓரங்கட்டப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமும் சபாநாயகர்களின் விதிமீறல்களும்

தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது தீவிரமான பாரபட்சக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்குச் சமீபத்திய உதாரணமாக மத்தியப் பிரதேச மாநி லத்தின் மாநிலங்களவைத் தேர்தல் அமைந்துள் ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட உறுதிமொழிப் பத்திரத்தில் விவரக் குறைபாடு இருந்ததாகக் கூறி, தேர்தல் நடத்தும் அதிகாரி ஒரு வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்தார். ஆனால், அந்தத் துல்லியமின்மைக் குற்றச்சாட்டு க்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், அது ஆளும் கட்சியான பாஜகவின் வேட்பாளர் முன்வைத்த கூற்றுகளின் அடிப்படையில் மட்டுமே எழுப்பப்பட்டது என்றும் தெலுங்கானா உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு பின்னர் தெளிவுபடுத்தியது. இங்கும் கூட, தேர்தல் நடத்தும் அதிகாரியின் அப்பட்டமான பாரபட்சமான நடவடிக்கையை உயர் நீதித்துறை சரிசெய்யவில்லை.

தேர்தல் முறையின் மற்றொரு முக்கிய நிபந்தனை என்னவென்றால், ஓர் அரசியல் கட்சியின் சின்னத்திலும், கொள்கை மற்றும் திட்டங்களின் அடிப்படையிலும் வெற்றிபெறும் வேட்பாளர்கள், சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ தொடர்ந்து அக்கட்சி யையே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ப தாகும். இருப்பினும், மேற்குவங்க சட்டமன்றத் தின் அவைத் தலைவர் மற்றும் மக்களவை சபாநா யகர் ஆகியோர் மீது, இக்கோட்பாடு பெருமள வில் மற்றும் வெளிப்படையாக மீறப்படுவ தாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள் ளன. இக்குறிப்பிட்ட விவகாரம், எதிர்காலச் சட்டங்களை நிறைவேற்றுவதில், குறிப்பாக தேர்தல் முறையின் மற்றொரு முக்கிய அங்கமான தொகுதி மறுவரையறையை (delimitation) மேற்கொள்வதில் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

முற்போக்கு அரசியல் சக்திகளின் கடமை

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், பல கட்சித் தேர்தல் முறையை அடிப்படையாக கொண்ட ஜனநாயகக் கட்டமைப்புகள் கடுமை யான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. ஒன்றி யத்தை ஆளும் கட்சியான பாஜக தனது கோர மான முகத்தை வெளிப்படுத்தி, தீவிரமான ஜனநாயக எதிர்க்கட்சிகள் ஏதுமின்றி அரசியல் களத்தைச் ‘சுத்திகரிக்க’த் தயாராகி வருகிறது. இந்தியச் சூழலில், பன்முகத்தன்மையை ஒற்றைப் பரிமாணத்திலான பெரும்பான்மைவாதக் கொள்கை மூலம் நசுக்கிவிடும் கூடுதல் ஆபத்தும் இதில் அடங்கியுள்ளது.

21-ஆம் நூற்றாண்டில் இது முற்றிலும் காலத்திற்கு ஒவ்வாத ஒரு போக்காகும். தீவிர மான நவ-தாராளவாத மற்றும் சிலரின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அதிகார அமைப்பு, இச்சூழ்நிலையை நவ-பாசிசப் பண்புகளின் ஒரு தெளிவான உதாரணமாக மாற்றியுள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மையின் முற்போக்கு அரசியல் சக்திகள், கூட்டாட்சி மற்றும் சமூக நீதி ஆகியவற்றை மதிக்கும் சக்திகள் பரந்த அள வில் ஒன்றிணைவதே, ஜனநாயகத்தைத் தகர்க்கும் இத்தகைய அச்சுறுத்தலை முறியடிப்ப தற்கான ஒரே வழியாகும்.

ப்பிள்ஸ் டெமாக்ரசி, ஜூன் 21, 2026 தமிழில் சுருக்கம் : ச.வீரமணி