தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வனத்தில் ஜனநாயகம்

28 Mar 2026, 4:13 pm
வனத்தில் ஜனநாயகம்

வனத்தில் ஜனநாயகம்

வனத்தில் ஒரே கலவரம். கூச்சல் குழப்பங்கள். எப்போதுமே சிங்கம் மட்டும்தான் இந்த காட்டுக்கு ராஜாவா?அதற்கு மட்டும் தான் எப்போதும் சொகுசான வாழ்க்கையா?.நாம் என்ன சிங்கத்திற்கு எப்போதுமே அடிமையா? என்று தங்களுக்குள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தன.  இதற்கெல்லாம் ஒரே தீர்வு தேர்தல் தான். தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே காட்டிற்கு தலைவராக வரட்டும் என்று தீர்மானித்  து. சிங்கத்திடம் சென்று,தேர்தல் நடத்த வேண்டும் வெற்றி பெற்றால் நீங்களே ராஜாவாகவும் தலைவராகவும் நீடிக்கலாம் என்று கூறியது தான் தாமதம் “உங்களுக்கெல்லாம் என்ன திமிர்.என் எதிரில் வந்து பேசும் துணிச்சலை யார் தந்தது.நான் தான் இந்த காட்டுக்கே எப்போதுமே ராஜா.நான் வெச்சது தான் சட்டம்.ஒழுங்கா ஓடிவிடுங்கள் இல்லையேல் வேறு மாதிரி கவனிக்க வேண்டியதிருக்கும்”என்ற    வுடன்”காட்டில் உள்ள பெரும்பான்மையினர் தேர்தலை விரும்புகிறார்கள்.வனத்தின் மாண்பை பாதுகாத்து,நீடித்த நிலைத்த தன்மையை உருவாக்கி அனைவரும் இணைந்து வாழ்வோமே”என்று யானை கூற “ என்ன!துதிக்கையாரே! நீங்களும் அதுகளுடன் சேர்ந்து குழப்பம் செய்கிறீரோ! எல்லாம் உங்க வேலை தானோ! உருவத்தில் மட்டும் நீங்கள் பெரியவராக இருந்தால்,என்னை ஜெயித்து விட முடியுமா?கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் யானையாரே”. என்று சிங்கம் பல்லைக் கடித்தது கோபமாக “சிங்க ராஜா,இவர்கள் எல்லாம் உங்களை என்ன செய்ய முடியும். எத்தனையோ காலமாக காட்டுக்கு ராஜாவாக இருந்து கொண்டிருக்கிறீர்கள். யாரும் உங்களை தோற்கடிக்க முடியாது.சரி என்று ஒப்புக்கொள்ளுங்கள்.நான் இருக்கிறேன்.உங்கள் வெற்றி நிச்சயம்”என்றது நரியார். “என்ன நரியாரே!நீங்கள் ஏதும் சூழ்ச்சி கீழ்ச்சி செய்யவில்லையே .நம்பலாமா?”என்று கேட்டது சிங்கம் “அய்யோ ராஜா.நீங்கள் தான் இந்த காட்டுக்கு எப்போதுமே தலைவன்.என்னை நம்புங்கள்” என்றது  புலி, குரங்கு, சிறுத்தை ஆகிய மூன்று பேரையும் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டது.கூட்டுத் தலைமை காட்டுக்கு நல்லது தானே என்று அனைவரும் ஒப்புக் கொண்டனர்.அறிவித்த தேதியில் அந்த ஆலமர நிழலில் தேர்தல் நடைபெறும். அனைவரும் எவ்வித பயமும் இன்றி வாக்களிக்கலாம்.உங்கள் வாக்கு விலைமதிப்பற்றது,பாதுகாப்பானதுங்கூட என்றும் அறிவிக்கப்பட்டது. சிங்கம்,யானை,கரடி,ஆமை மற்றும் மான் ஆகியோர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். யானை,கரடி,ஆமை ஆகிய மூன்று வேட்பாளர்கள் வாபஸ் பெற்று கொண்டனர். தேர்தல் பிரச்சாரம் மிக வேகமாக சூடு பிடித்தது. சிங்கமும் மானும் தன்னுடைய ஆதரவாளர்களுடன் வாக்குகளை சேகரித்தனர்.ஒவ்வொருவரும் தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை விளக்கமாக எடுத்துரைத்து வாக்களிக்கும்படி கேட்டன. ஒரு வருடத்திற்கு உரிய உணவை, சிங்கம் அவரவர் இல்லத்திற்கு கொண்டு வந்து கொடுப்பேன் என்று உறுதியளித்த ரகசியத்தை அனைத்து வாக் காளர்களுக்கும் நரி யார் மூலம் பரவி யது. மானின் தேர் தல் அறிக்கையில் நல்ல அம்சங்கள் இருப்பதாகவும், யாரிடமும் இனாம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க வேண் டாம் என்றும் தங்க ளுக்குள் பேசிக் கொண் டன. தேர்தல் தேதி யன்று,அந்த பரந்து விரிந்த ஆலமரத் தின் மூலையில் மறைவாக வைக்கப் பட்டிருந்த வாக்குப் பெட்டியில் அனை வரும் தங்கள் வாக் குகளை அமைதி யாக தங்கள் விருப் பப்படி செலுத்தினர். அன்று மாலையே வாக்குகள் எண் ணப்பட்டன. மா னுக்கு 1630 வாக் குகளும் சிங்கத் திற்கு 85 வாக்கு களும் கிடைத்தது.மான் வெற்றி பெற்ற தாக அறிவிக்கப் பட்டது.  “பெரும்பான் மையினரின் இந்த முடிவான ஜனநா யக மாண்பை நான் மனதார மதித்து வர வேற்கிறேன், மானின் வெற்றிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.மேலும் எனக்கு வாக்களித்த அனைவருக் கும் இச்சமயத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து இந்த காட்டை பாதுகாப்போம்”என்று கூறியது சிங்கம்.மானின் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் கம்பீரமாய் சிங்கம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.