ஒரே அடையாள அட்டை, சம உரிமை கோரி
1 Dec 2025, 5:20 pm
<p><strong>ஒரே அடையாள அட்டை, சம உரிமை கோரி</strong></p>
<p>சேலம், டிச.1- மாற்றுத்திறனாளிகளின் வாழ் வாதாரத்தை உறுதிப்படுத்தவும், ஒரே அடையாள அட்டை, சம உரிமை கோரி, ஒன்றிய அரசை வலி யுறுத்தி, திங்களன்று மாநிலம் தழு விய போராட்டத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஊனமுற்றோர் உரிமை சட்டம் 2016 படி மாற்றுத்திறனாளிகளுக் கான கண்ணியமான வாழ்க்கை யை உறுதி செய்ய கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு இலவச கல்வி இட ஒதுக்கீடு தனி யார் துறைகளில் வேலை சமூக பாது காப்பு சுகாதாரம் சிறப்பு திட்டங் கள் சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் அனைத்தும் எளிதில் அனுபவிக் கும் வகையில் சூழலை உரு வாக்க வேண்டும் என ஐநா சிறப்பு மாநாட்டில் சிறப்பு பிரகடனம் செய் யப்பட்டது. இந்தியாவில் மாற்றுத்திறனா ளிகளுக்கு உரிய நிதியை அளிக்கா மல் தொடர்ந்து மாநில அரசு மட் டுமே பங்களிப்பை செலுத்தி வருகி றது. இதனால் மாற்றுத்திறனாளிக ளுக்கு உரிய நிதி கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய மோடி அர சாங்கம் உடனடியாக மாற்றுத்திற னாளிகளுக்கான நிதியை அளிக்க வேண்டும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான அடையாள அட்டை களை அனைத்து உரிமைகளையும் பெறும் வகையில் தர வேண்டும். அந்தியோதயா அன்ன போஜனா திட்டத்தின் கீழ் 35 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்க ஒன் றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆந்திர மாநிலத்தில் வழங்குவதை போல் தமிழகத் திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநி லம் முழுவதும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அதன்ஒருபகுதியாக சேலம் கோட்டை பாரத ஸ்டேட் வங்கி முன்பு மாற்றுத்திறனாளிகள் கண் களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் அமலா ராணி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டப் பொருளாளர் ஜே. ஜார்ஜ் பெர்னாடஸ் துவக்கி வைத்து பேசி னார். மாவட்டச் செயலாளர் எம். குணசேகரன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தின் முன்பு கருப்பு கொடியேந்தி நடைபெற்ற ஆர்ப் ்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட் டத் தலைவர் டி.சாவித்திரி தலை மை வகித்தார். மாநிலக்குழு உறுப் பினர் ப.மாரிமுத்து ஆர்ப்பாட்டத் தைத் தொடங்கி வைத்தார். மாவட் டப் பொருளாளர் சு.கிருஷ்ண மூர்த்தி, நிர்வாகிகள் வி.ராஜு, டி. சுப்பிரமணி, கே.தங்கமணி, ஏ.பி. ராஜு, எஸ்.செந்தில்குமார் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு கண்ணில் கருப்பு துணி கட்டி நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட துணைச் செய லாளர் கே, சுசிலா தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் எம். மாரி முத்து, மாவட்டத் தலைவர் தமிழ் செல்வி, மாவட்டப் பொருளாளர் ஜி. மாதேசன், மாவட்ட துணைச் செயலாளர் எம். அண்ணாமலை உள்ளிட்ட பலர் பங்கேற்று கோரிக் கைகளை விளக்கி பேசினர். அரூர் இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் கே. காந்தி தலை மை வகித்தார். வட்டச் செயலாளர் சி. வேலாயுதம், ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப்பேசினர். பென் னாகரம் இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் எஸ். சமூண்டீஸ் வரி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் கே. ஜி. கரூ ரான்,பி.கே, மாரியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப்பேசி னர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு ஆர்டிஓ அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஆர். முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் நாகேஸ்வரி, பொருளாளர் அருண் குமார், மாவட்ட உதவி செயலாளர் வெங்கடாசலம் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் அர்ஜுனன், உதயகுமார் குணசேகரன், பரஞ் சோதி, உள்ளிட்டோர் கண்ணில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
