தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூரில் கந்துவட்டி கொடுமை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

1 Dec 2025, 5:20 pm
திருப்பூரில் கந்துவட்டி கொடுமை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
<p><strong>திருப்பூரில் கந்துவட்டி கொடுமை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை</strong></p> <p>திருப்பூர், டிச.1- திருப்பூரில் ரூ.3 லட்சம் கடன் பெற்ற தற்கு வாரம் ரூ.15 ஆயிரம் வட்டி கட்ட நிர்பந்தம் செய்வதாகக் கூறி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று பாதிக்கப்பட்டவர் மனு அளித்துள்ளார். &nbsp;திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சி யர் மனிஷ் நாரணவரே தலைமையில் மக்கள் குறைதீர்க் கூட்டம் நடைபெற் றது. இதில், டி.சாரதா என்பவர் அளித்த &nbsp;மனுவில், அவிநாசி தாலுகா, பெரியாயி பாளையம் பகுதியில் வசித்து வரும் இவ ரும், இவரது கணவரும் கட்டிட வேலை &nbsp;செய்து வருவதாகவும், வேலை சரியாக &nbsp;கிடைக்காமல், கஷ்டப்படும் நிலையில், &nbsp;தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக தங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் வடிவு என்பவரிடம் ரூ.3 லட்சம் கடன் &nbsp;வாங்கி இருப்பதாக கூறியுள்ளனர். கட னுக்கு எவ்வளவு வட்டி என்று வடிவு கூறாத நிலையில், அவரிடம் வட்டி பணம் கொடுக்க சென்றபோது, வாரம் ரூ.15 ஆயிரம் வட்டி தர வேண்டும் என &nbsp;அவர் கூறியிருக்கிறார். வேறு வழி &nbsp;இல்லாமல் மற்றவர்களிடமும் கடன் &nbsp;பெற்று மாதம் ரூ.50 ஆயிரம் வட்டி கட்டி &nbsp;வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அத்து டன் தனது 10 பவுன் தங்கச்சங்கிலி மற் றும் வளையல்களை விற்று மற்ற கந்து வட்டி நபர்களிடம் பணம் வாங்கி வட்டி பணம் கட்டியதாக கூறியிருக்கிறார். இதுதொடர்பாக ஆட்சியரிம் புகார் கொடுத்தால் கந்து வட்டி கும்பல் தங்களை கொலை செய்யவும் அஞ்ச மாட்டார்கள். தனக்கு ஏதேனும் நேரிட் டால் அவர்கள்தான் பொறுப்பு. கந்து &nbsp;வட்டி கும்பலால் நகை, பணம், வீடு அனைத்தையும் இழந்து நிற்பதாகவும், எனவே அந்த கந்துவட்டி கும்பல் மீது &nbsp;உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் சாரதா கேட்டுக் கொண்டுள் ளார். வரம்புமீறும் கந்து வட்டி கும்பல்: &nbsp;திருப்பூரில் &nbsp;லட்சக்கணக்கானோர் பனியன் கம்பெனிகளில் வேலை செய்து &nbsp;வருகின்றனர். அவர்களுக்கு வார சம்ப ளம் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுகிறது. பணம் பற்றாக்குறை &nbsp;என சிலர் தனிநபரிடம் கந்து வட்டிக்கு &nbsp;பணம் வாங்குகிறார்கள். கந்து வட்டிக் காரர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 &nbsp;மணிக்கு பணம் கொடுத்தவரிடம் சென்று கேட்கிறார்கள். கடன் தரத் தாமத மானால், பெண்களையும், அவர்கள் &nbsp;குடும்பத்தாரையும் கொச்சைவார்த்தை யில் திட்டுகின்றனர். மேலும் வீட்டில் உள்ள அதிக விலைக்குச் செல்லும் பொருட்களை எடுத்துச் சென்று விடுகி றார்கள். எனவே கந்துவட்டி கும்பல் மீது &nbsp;கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என &nbsp;நல்லூர் நுகர்வோர் நல மன்றம் மனு அளித்துள்ளது. கண் பார்வையற்ற மாற்றுத் திறனா ளியான பி.மருது பாண்டி என்பவர் அளித்த மனுவில், தனது மகள் பொறி யியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகி றாள். மாற்றுத்திறனாளிகள் நல வாரி யத்தின் மூலம் கிடைக்கும் உதவித் தொகை ஆண்டுதோறும் பெற்று வந் தது, இந்த ஆண்டும் விண்ணப்பித்துள் ளார். ஆனால் கடந்த ஆண்டு விண்ணப் பித்த மனுவை தொலைத்துவிட்டதாக அலுவலர்கள் கூறுகிறார்கள். தனது மக ளுக்கு உதவி தொகை கிடைக்க உத வும்படி கேட்டு கொண்டுள்ளார். கை விரல்களை இழந்த தூய்மைப் பணியாளர்: உடுமலைபேட்டை ஏரிப்பாளையம் பகுதியில் வசித்து வரும் மரகதம் என்ற &nbsp;தூய்மைப் பணியாளர், சின்னவீரம்பட்டி &nbsp;ஊராட்சியில் தினக்கூலி தூய்மைப் பணி யாளராக வேலை செய்து வருவதாக வும், கடந்த அக்டோபர் 9ஆம் தேதி வியா ழக்கிழமை வழக்கம் போல் குப்பை சேக ரித்து குப்பை தொட்டியில் கொட்டும் போது, தகர மூடி விழுந்து தனது இடது &nbsp;கை நடுவிரல், மோதிர விரல்கள் துண் டாகிவிட்டன. உடனடியாக உடுமலை மற்றும் கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் நரம்புகள் &nbsp;சேதமானதால் துண்டான விரல்களை &nbsp;இணைக்க முடியாது என மருத்துவர்கள் &nbsp;கூறிவிட்டனர். குப்பைத் தொட்டி பழு தாகி இருப்பது பற்றி ஊராட்சி செயலரி டம் பலமுறை &nbsp;தெரிவித்தும் நடவடிக்கை &nbsp;எடுக்காததால், சம்பந்தப்பட்ட ஊராட்சி &nbsp;செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும், இழப்பீடு வழங்க வேண்டும் எனக் &nbsp;கோரியுள்ளார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.